சிங்கப்பூரில் TOTO Draw கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது, ஜாக்பாட் பரிசாக S$1,000,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜாக்பாட் பரிசான S$1,000,000 மற்றும் குரூப் 2 பரிசுகள் யாராலும் வெல்லப்படவில்லை என்பதால் அந்த பரிசு தொகை நேற்று நடந்த toto draw போட்டியில் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (21.07.2022) புதன்கிழமை மாலை சிங்கப்பூர் நேரப்படி சரியாக 6.30 மணிக்கு குலுக்கல் நடைபெற்றது. குரூப் 1 பரிசாக நேற்று அறிவிக்கப்பட்ட தொகை S$2,835,750 ஆகும், இந்நிலையில் அதிர்ஷ்ட எண்களான 4,15,31,42,43,47 என்பதை சரியாக பொருத்தி இருவர் முதல் ஜாக்பாட் பரிசை தட்டிச்சென்றனர்.
ஆகவே S$2,835,750 என்ற தொகை இருவருக்கிடையில் சரிசமமாக பிரித்து அளிக்கப்பட்டது. இருவருக்கும் தலா S$1,417,875 அளிக்கப்பட்டது. மேலும் குரூப் 2 பரிசான S$ 5,97,000ம் இரு வெற்றியாளர்களால் பிரித்துக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த இருவருக்கு தலா $2,98,500 அளிக்கப்பட்டது, நேற்று நடந்த totoவில் வென்றவர்கள் பட்டியல் கீழே அளிக்கப்பட்டுள்ளது.
இனி அடுத்த toto draw வருகின்ற திங்கள் கிழமை 25.07.2022 அன்று நடைபெறும், இதில் குரூப் 1 பரிசு தொகை சுமார் S$10,00,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.