TamilSaaga

சிங்கப்பூர் TOTO Draw முடிவுகள்… ஒரே ஆளாக 6 கோடியே 87 லட்சத்தை வீட்டிற்கு அள்ளிச் சென்ற “லக்கி மேன்” – மூளையை கசக்கி அலசி வாங்கிய நம்பருக்கு கொட்டிய அதிர்ஷ்டம்!

SINGAPORE: நேற்று (ஜுலை.25) திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு toto draw நடைபெற்றது. இந்த முறையும் S$10,00,000 குரூப் 1 பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டது. இதற்கான டிக்கெட்கள் நேற்று மாலை வரை விற்பனை செய்யப்பட்டது.

விற்பனை முடிந்து நேற்று மாலை பொதுமக்கள் முன்னிலையில் இந்த toto drawவிற்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசான 1,194,850 டாலர் பரிசுத் தொகையை ஒருவர் வென்றுள்ளார்.

முதல் பரிசுக்கான வரிசை எண், 2, 6, 29, 30, 31, 44 ஆகும். இந்த லாட்டரி சீட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி முதல் பரிசான 11 லட்சம் ப்ளஸ் டாலரை அள்ளிச் செல்கிறார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரையே திரும்பிப் பார்க்க வைத்த இந்தியன்.. சிங்கை பிரதமரே வியந்து பாராட்டிய அசுர வளர்ச்சி – இந்தியன்னா இப்படி இருக்கணும்!

அதேபோல், இரண்டாம் பரிசான 251, 548 டாலரை ஒரேயொரு நபர் வென்றுள்ளார். இதன் வரிசை எண், 2, 6, 29, 30, 31, 44. Additional Number 40 ஆகும்.

அதேபோல், மூன்றாம் பரிசான 2,621 டாலர் பரிசுத் தொகையை 66 பேர் வென்றுள்ளனர். நான்காம் பரிசான 500 டாலரை 189 பேர் வென்றுள்ளனர். ஐந்தாம் பரிசான 50 டாலரை 4,912 பேர் வென்றுள்ளனர். ஆறாம் பரிசான 25 டாலரை 5,938 பேர் வென்றுள்ளனர். கடைசி பரிசான 10 டாலரை 93,143 பேர் வென்றுள்ளனர்.

முதல் பரிசை வென்றவர் இந்திய ரூபாய் மதிப்பில், 6 கோடியே 87 லட்சம் பணத்தொகையை தனது வீட்டிற்கு எடுத்துச் செல்ல உள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts