கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி சிங்கப்பூரில் கல்வி அமைச்சகம் ஒரு சிறப்பான தகவலை வெளியிட்டது. அதில், இனி ஆண்டுக்கு சுமார் 1000 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தது. உண்மையில் அரசின் இந்த தகவல் பல ஆசிரியர் பெருமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.
ஆண்டுக்கு 1000 ஆசிரியர்கள்
MOE எனப்படும் சிங்கப்பூரின் கல்வி அமைச்சகம் அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் 1,000க்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்களை பணியமர்த்தவுள்ளது என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கடந்த ஜூலை 9, 2025 அன்று தேசிய கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான முதலீட்டு விழாவில் தனது உரையில் தெரிவித்தார்.
அவர் தனது உரையில், தேசத்தைக் கட்டியெழுப்பும் நிலையான உறுதிப்பாட்டில், கல்வி முறையின் முக்கியத்தும் பெரிய பங்கை வகிக்கிறது என்றார். மேலும், கல்வி அமைச்சகம் பல ஆண்டுகளாக ஒரு உறுதியான மற்றும் உயர்தர கற்பித்தல் படையை உருவாக்கியுள்ளது என்றும், வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியைப் பொருட்படுத்தாமல், சிங்கப்பூரில் குழந்தைகளை அவர்களின் திறனை உணர்ந்து வளர்ப்பதற்காக இந்த புதிய முயற்சி உதவும் என்றார்.
700லிருந்து உயர்த்தப்படும் எண்ணிக்கை
முந்தைய ஆண்டுகளை பொறுத்தவரை, ஆண்டுக்கு 700 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய விருப்பம் தெரிவித்தது சிங்கப்பூர் அரசு. மேலும் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்றம், சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் மாணவர்கள் சிறந்து விளங்க இந்த புதிய முயற்சி கைகொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.
சிங்கப்பூரில் 2400 பேருக்கு வேலை ரெடியா இருக்கு – அமைச்சர் டான் சீ லெங் சொன்ன குட் நியூஸ்!
வெளிநாட்டவருக்கு வாய்ப்பு?
ஆண்டுக்கு 1000 புதிய ஆசிரியர்கள் நியமனம் என்ற இந்த திட்டம், செயல்பட துவங்க இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும் என்பதால் உடனடியாகவும், நேரடியாகவும் இந்த பணிக்கு வெளிநாட்டவர்கள் சேர்க்கப்படுவார்களா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. அதே நேரம் இந்த பணிக்கான ஆட்கள் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டவருக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.