TamilSaaga

சிங்கப்பூர் நண்பர்களே.. உங்கள் செய்தி Tamil Saaga-வில் வெளியாகணுமா? – இதோ ஓர் அருமையான வாய்ப்பு!

Tamil Saaga Singapore: சிங்கப்பூர் தமிழ் சாகா வாசகர்களே.. உங்களை இந்த செய்தி வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சிங்கப்பூரில் இருந்து நீங்கள் தரும் செய்திகள் தமிழ் சாகாவில் வெளியாக வேண்டுமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு. ஆம்! சிங்கப்பூரில் நீங்கள் எங்கு இருந்தாலும், உங்களைச் சுற்றி நடக்கும் முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள் போன்றவற்றை எங்களுக்கு அனுப்பலாம்.

உதாரணமாக, நீங்கள் தங்கியிருக்கும் இடத்திலோ அல்லது அருகிலோ நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை, தகவல்களை எங்களுக்கு அனுப்பலாம். நீங்கள் உங்கள் நண்பர்களோடு வெளியே சென்று மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை வெளிப்படுத்த விரும்பினாலும் எங்களுக்கு தெரிவிக்கலாம்.

Breaking : சிங்கப்பூர் – திருச்சி : டிசம்பர் முதல் மார்ச் 2022 வரையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிக்கெட் புக்கிங் தொடக்கம்

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வந்து பணிபுரிந்து உங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்திய உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். அது, மற்றவர்களுக்கு நிச்சயம் ஒரு தூண்டுகோலாக இருக்கும். இதுபோன்று, நல்ல பயனுள்ள மற்றும் உங்களைச் சுற்றி நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் அனைத்தையும் எங்களுக்கு அனுப்பலாம்.

நீங்கள் அளிக்க விரும்பும் தகவலை எழுத்து வடிவிலோ, புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ எங்களுக்கு அனுப்புங்கள். வாசகர்கள் அனுப்பும் செய்திகளில், தமிழ் சாகா நியூஸ் குழு தேர்வு முக்கியமான செய்தி மட்டும் வெளியிடப்படும். தினம் ஒரு செய்தி மட்டும் அவ்வாறு வெளியாகும். தகவல்களை, புகைப்படங்களை, வீடியோக்களை நீங்கள் ‘tamilsaaga@gmail.com’ எனும் மெயில் ஐடிக்கு அனுப்புங்கள்.

“சிங்கப்பூர் VTL பாதை” : இந்திய குடிமக்கள் மகிழ்ச்சி – விமானங்களுக்கான தேவை அதிகரிப்பைக் காணும் முகவர்கள்

உங்கள் தகவல்கள் அனைத்தும் செய்தியாக வெளியாகும் வாய்ப்பு இது. ஆகையால், நீங்கள் அனுப்பும் செய்திகள், சிங்கப்பூரில் இருக்கும் மற்ற தமிழ் சொந்தங்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் இருந்தால், அந்த அனைத்து பாராட்டுகளும், நன்றிகளும் உங்களுக்கே உரித்தாகும்.

தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/saagatamil

Related posts