சிங்கப்பூரில் சிம் அட்டை மோசடி: 2 பேர் கைது, 8 பேர் விசாரணை
சிங்கப்பூரில் மார்ச் 5ஆம் தேதி ஒரே நேரத்தில் 3 தொலைபேசிக் கடைகளில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், Prepaid எனப்படும் முன்பணம் கட்டிப் பயன்படுத்தும் சிம் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 7 ஆடவர்கள் மற்றும் ஒரு பெண் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.
சோதனை நடத்தப்பட்ட கடைகள்:
ARS Digital World (சிராங்கூன் சாலை)
Univercell Mobiles Technology (சிராங்கூன் சாலை)
Icares Mobile Services (உட்லண்ட்ஸ் தொழில்துறை வளாகம்)
மோசடி முறை:
Prepaid சிம் அட்டைகளை மோசடிக்கு பயன்படுத்த துணைபுரிந்ததாக சந்தேகிக்கப்படும் தொலைபேசி விற்பனையாளர்களையும், அவர்களின் ஊழியர்களையும் குறிவைத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. முறையாக பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களின் தகவல்களை பயன்படுத்தி, அவர்கள் கூடுதல் சிம் அட்டைகளை பதிவு செய்ததாக நம்பப்படுகிறது.
பறிமுதல்:
இந்த சோதனையில், பல்வேறு வகையான தொலைபேசிகள், தொலைபேசி பதிவு ஆவணங்கள், சிம் அட்டைகள் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணை:
கைது செய்யப்பட்ட 2 பேர் உட்பட 10 பேரும் 3 குற்றப்பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர். அவற்றில் ஒன்று, மற்றவர்களின் தனிப்பட்ட விவரங்களை சட்டவிரோதமாக பெற்றது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10,000 வெள்ளி அபராதம், 3 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு அரசு விதித்த புதிய சட்ட விதிகள்!!!