TamilSaaga

“சிங்கப்பூரில் South Korea நாட்டை சேர்ந்த 6 பெணகள் கைது” : போலீசார் மற்றும் SFA நடத்திய அதிரடி சோதனை

சிங்கப்பூரில் மசாஜ் நிறுவனங்கள் மற்றும் பொது பொழுதுபோக்கு மற்றும் இரவு நேர விற்பனை நிலையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற அமலாக்க நடவடிக்கைகளின் முடிவுகளை காவல்துறை தற்போது அறிவித்துள்ளது. அதில் மீடியாபோலிஸில் உள்ள மீடியா வட்டத்தில் ஒரு F&B அவுட்லெட் சம்பந்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஹோஸ்டஸ்களில் உள்ள பணிப்பெண்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதனையடுத்து சிங்கப்பூர் உணவு நிறுவனத்துடன் (SFA) ஒரு கூட்டு நடவடிக்கையை நடத்தியது சிங்கப்பூர் போலீஸ்த் துறை .

இந்த சோதனையின் போது, ​​கடையில் பானங்கள் வாங்குவதற்கு ஆறு பெண்கள் வாடிக்கையாளர்களுக்கு தோழமை வழங்கியதாகக் கூறப்படுகிறது, இதற்காக வாடிக்கையாளர்களிடம் அவர்கள் கமிஷன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பெண்கள் 23 முதல் 31 வயதுக்குட்பட்ட தென்கொரிய நாட்டவர்கள். வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் சரியான வேலை அனுமதி இல்லாமல் வேலை செய்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சமூகக் கூட்டங்கள் மற்றும் உணவருந்துவதற்கான கட்டுப்பாடுகளை பெருந்தொற்று பல அமைச்சக பணிக்குழு (MDF) அறிவித்ததையடுத்து இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 24 அன்று நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைகளின் விளைவாக 32 மசாஜ் நிறுவனங்கள் மசாஜ் நிறுவனங்கள் சட்டம், மசாஜ் நிறுவனங்கள் விதிகள் 2018 மற்றும் கோவிட் -19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு உத்தரவு) விதிமுறைகள் 2020 ஆகியவற்றின் கீழ் விதி மீறல்கள் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

22 முதல் 47 வயதுக்குட்பட்ட 23 பெண்கள் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டம் மற்றும் மகளிர் சாசனத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மசாஜ் நிறுவனங்களுக்குள் பெண்கள் பாலியல் சேவைகளை வழங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Related posts