TamilSaaga

சிங்கப்பூரில் அடுத்தவர் பொண்டாட்டி மேல் கை வைத்தால்.. வெட்டப்படுவது விரலா? தலையா? பெண்ணை பொன் போல் பார்க்கிறாங்களாம்…

ஒவ்வொரு பெண்ணுக்குமே இருக்கும் அதீத பயமே தங்களின் பாதுகாப்பு குறித்து தான். ஆனால் சிங்கப்பூரில் இருக்கும் பெண்கள் அதுகுறித்து கவலைப்படவே தேவையில்லை. அடுத்த வீட்டு பெண் மீதோ, அடுத்தவர் மனைவி மீதோ தவறான கண்ணோட்டம் கொண்டும் துன்புறுத்தும் ஆண்களுக்கு இங்கு கிடைக்கும் தண்டனை தான் பல நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கிறது.

சிங்கப்பூரில் பாலியல் குற்றத்தை செய்யுவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், குற்றங்கள் அதிகரிக்கும் போது அந்த தண்டனையினை மேலும் கடுமையாக்கி விடுவர். அப்போது இந்த பிரச்னைகளை அடக்க ஏதுவாக இருக்கும்.

இந்த தண்டனைகளால், சிங்கப்பூரில் 2021ம் ஆண்டு கணக்கின்படி 1,480 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், சவுக்கடிகளும் கொடுக்கப்படும். இந்த சவுக்கடி தண்டனை அந்த வயதுக்கு ஏற்ப எண்ணிக்கை கூடும்.

பெண்களை பொதுவெளியில் சீண்டி அது உங்கள் மீது வழக்காக மாறினால் 6 மாதங்களுக்கு சிறைத்தண்டனை தரப்படும். ஆனால் இதுவரை கற்பழிப்பு வழக்குகளில் சிங்கப்பூர் மரண தண்டனையை யாருக்கும் வழங்கியது இல்லை.

சிங்கப்பூரில், சட்டம் S375(4)ன் படி சூழ்நிலையில் கற்பழிப்பு செய்யப்பட்டாலும் கூட, ஒரு ஆண் தனது மனைவியைக் கற்பழித்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட முடியாது. சிங்கப்பூரில் பல பெண்கள் தங்கள் மீது வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்படுவதாக குற்றச்சாட்டை முன் வைத்தாலும் சட்டத்தின் காரணமாக அவர்கள் கணவர்கள் மீது வழக்கு தொடரப்பட இயலாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையை விரைவில் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஆனால், அடுத்தவர்களின் மனைவியை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆண்களுக்கு 8ல் இருந்து 20 வருட கடுங்காவல் தண்டனை கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாது, குறைந்தது 12 சவுக்கடிகளாவது கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts