TamilSaaga

சிங்கப்பூரில் S-pass-ல் பணிபுரிபவர்களுக்கு முக்கிய செய்தி… செப்டம்பர் 2023 முதல் அடிப்படை சம்பளம் உயர்வு!

சிங்கப்பூரில் S-பாசில் பணிபுரியவர்களுக்கு கடந்த செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு அடிப்படை சம்பளமானது உயர்த்தப்பட்டிருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்நிலையில் S-பாசில் பணிபுரிபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மீண்டும் இந்த வருடம் செப்டம்பர் 2023 முதல் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த தெளிவான விவரங்கள் அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பினான்சியல் சர்வீஸ் தவிர மற்ற துறையில் பணிபுரிபவர்களுக்கு செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு முதல் அடிப்படை சம்பளம் 3000 வெள்ளி இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த சம்பளமானது 23 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு வயதிற்கு ஏற்றார் போல் சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் செப்டம்பர் 2023 முதல் சிங்கப்பூரில் S பாசில் பணிபுரிபவர்களுக்கு அடிப்படை சம்பளம் 3150 வெள்ளி இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பளமும் 23 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு வயதிற்கு ஏற்றார் போல் நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், செப்டம்பர் 2025 ஆம் ஆண்டு முதல் அடிப்படை சம்பளம் 3300 வெள்ளி இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பினான்சியல் சர்வீஸ் கீழே வருபவர்களுக்கு ஏற்கனவே அடிப்படைச் சம்பளம் 3500 வெள்ளி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது திருத்தப்பட்ட விதிகளின்படி அடிப்படை சம்பளமானது 3650 வெள்ளி இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 2025 ஆம் ஆண்டு இவர்களுக்கான சம்பளம் 3,800 இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுக்கு செலுத்தப்படும் லெவி 450 வெள்ளி என்று ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 2023 முதல் 450 முதல் 550 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் S-பாசில் பணிபுரியவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு செய்தியானது ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கும் என நம்புகிறோம்.

Related posts