1946ம் ஆண்டு சிங்கப்பூரில் சிறைச்சாலை ஒரு அரசு நிறுவனமாக துவங்கப்பட்டதிலிருந்து சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை (Singapore Prison Service – SPS) தற்போது 75 ஆண்டிகளை நிறைவு செய்கிறது.
இதனை குறிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ தனது முகநூலில் வெளியிட்ட பதிவில்,
கைதிகளின் மறுவாழ்விற்கான சேவையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவர்களின் வாழ்க்கையை நல்வழியில் மாற்றிட சிறப்பான சேவையை செய்து வரும் சிங்கப்பூர் சிறைச்சாலை சேவைக்கு (SPS) பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் பதிவு செய்தார்.
பல ஆண்டுகளாக SPS செய்து வரும் சேவை மற்றும் பணிகளை விவரிக்கும் வகையில் அதன் தலைமையகத்தில் மரபுடைமை காட்சியகம் அமைக்கப்படும் என்றும் 75 ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் அஞ்சல் தலை வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.