TamilSaaga

சிங்கப்பூர் வாழ் கோழி பிரியர்களே கவலை வேண்டாம்.. எங்ககிட்ட கோழி Stock இருக்கு – நம்பிக்கை கொடுத்த சிங்கை Poultry நிறுவனம்!

சிங்கப்பூரில் கோழி இறைச்சி சப்ளை செய்யும் (Certified) நிறுவனமான கீ சாங், வரும் ஜூன் 1 முதல் மலேசியா தனது கோழிகளின் ஏற்றுமதியை நிறுத்தும் முன் தனது நிறுவனம் கோழி உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமை (மே 25) வெளியிடப்பட்ட ஒரு டிக்டோக் வீடியோவில், கீ சாங் நிறுவனம் தன்னிடம் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் பலர் சில நூர் கோழிகளை பதப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

“மலேசியாவின் தடை தொடங்கும் முன் இன்னும் அதிகமான கையிருப்புகள் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்த காலகட்டத்தில் அதிக புதிய கோழியை பதப்படுத்தவுள்ளதாக” அந்த நிறுவனம் தனது பதிவில் கூறியுள்ளது.

“கவலைப்பட வேண்டாம், எங்களால் முடிந்தவரை சிறந்ததை வழங்க நாங்கள் கூடுதல் நேரமெடுத்து கடினமாக உழைக்கிறோம்.” என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

கால் செருப்புகளை விட கேவலமாக நடத்தப்பட்ட தமிழர்கள்.. அன்றே நம் முன்னோர்களை நசுக்கிய வறுமை.. கப்பல் கப்பலாக சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்ட கொத்தடிமைகள்

அண்டை நாடான மலேசியா தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள கோழிப்பண்ணை பற்றாக்குறையை சமாளிக்க உயிருள்ள கோழி ஏற்றுமதியை நிறுத்துவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்தத் தடையால் அதிகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நாடுகளில் நமது சிங்கப்பூரும் ஒன்று.

சிங்கப்பூர் உணவு முகமையின் (SFA) கூற்றுப்படி, கடந்த 2021ல் சிங்கப்பூரின் கோழி இறக்குமதியில் 34 சதவீதம் மலேசியாவில் இருந்து வந்தது என்று கூறியுள்ளது. ஏறக்குறைய சிங்கப்பூர் வரும் அனைத்தும் உயிருள்ள கோழிகளாக இறக்குமதி செய்யப்படுகின்றன, அவை சிங்கப்பூரில் அறுக்கப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts