சிங்கப்பூரில் கடந்த ஜூலை 14 அன்று இரவு நடந்த Toto டிராவின் இறுதிப் பரிசு S$ 8மில்லியனலிருந்து S$11.4 மில்லியனுக்கும் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதியில் இந்த drawவில் வென்ற இருவருக்கு இடையில் மேற்குறிய அந்த தொகை பிரித்துக்கொள்ளப்பட்டது.
முதல் பரிசான S$11,462,599 இருவரால் பிரித்துக்கொள்ளப்பட்டுள்ளது, அதாவது ஒரு நபருக்கு S$5,731,299 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி மாலை 6.30 மணிக்கு அடுத்த TOTO Draw நடைபெற்றது, ஜாக்பாட் பரிசாக S$1,000,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜாக்பாட் பரிசான S$1,000,000 மற்றும் குரூப் 2 பரிசுகள் யாராலும் வெல்லப்படவில்லை.
இந்நிலையில் இன்று இரவு (21.07.2022) நடைபெறும் toto drawவில் ஜாக்பாட் பரிசு S$2,400,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கான டிக்கெட்கள் மும்மரமாக விற்பனையாகிவருகின்றது.
மேலும் தகவல்களுக்கு Singapore Poolsன் அதிகாரப்பூர்வ இணையத்தில் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.