நேற்று (ஆகஸ்ட்,23) காலை சிங்கப்பூரின் பிரதான இடங்களான அரசு அலுவலகங்கள், தூதரகங்கள் மற்றும் பல முக்கியமான 18 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவல் காலை சுமார் 9 மணி அளவில் கிடைத்த நிலையில் உடனடியாக விரைந்த போலீசார், முக்கியமான அரசாங்க கட்டடங்களில் மற்றும் பல முக்கிய இடங்களில் சோதனைகளில் நடத்தினர்.
ஒரு முறைக்கு, பலமுறை சோதனை நடத்தியதில் சந்தேகத்திற்கு இடமான எவ்வித பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், மிரட்டல் கிடைத்த தகவலை பொய்த்த தகவல் என வழக்கு பதிவு செய்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. குற்றப் பிரிவு 1871ன் கீழ் 268 ஏ பிரிவின் கீழ் அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான தகவல் பரப்புதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இந்த குற்றமானது நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறிதண்டனை மற்றும் 50 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதே போன்றே, தென் கொரியாவிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அடுத்து போலீசார் கடுமையான தேடுதல் மேற்கொண்டதில், அது பொய்யான தகவல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோன்று தற்பொழுது சிங்கப்பூரிலும் நடந்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது. நேற்று கிடைத்த இந்த தகவலின் காரணமாக சிங்கப்பூரில் உள்ள முக்கியமான அரசாங்க அலுவலகங்கள் தேடுதல் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டன.