சிங்கப்பூரில் பான் ஐலண்ட் எக்ஸ்பிரஸ்வே (PIE) வழியாக சென்ற லாரி மோதியதில் இரண்டு வெளிநாட்டு தொழிலாளர்கள் இறந்த சம்பவம் சிங்கப்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. லாரிகளின் பின்னால் ஆபத்தான முறையில் பயணிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலை குறித்து பல கேள்விகள் எழுந்தன. இந்த விபத்துக்குப் பிறகு, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்த அடுத்தடுத்த மாதங்களில், லாரிகளின் பின்புறத்தில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல லாரிகளைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சகம் மறுஆய்வு செய்து வருவதாக போக்குவரத்துக்கான மூத்த இணை அமைச்சர் அமி கோர் கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை (அக்டோபர் 20) பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த திரு ஹொசைன் டோஃபாஸல் மற்றும் 28 வயதான இந்தியர் திரு சுகுணன் சுதீஷ்மோன் ஆகியோர் சாலைப் போக்குவரத்து விபத்தில் பல காயங்களால் இறந்துள்ளனர் என்று மாநில மரண விசாரணை அதிகாரி ஆடம் நகோடா கண்டறிந்தார். நீதிமன்ற ஆவணங்களின்படி இந்த ஆண்டு ஏப்ரல் 20 விபத்து நடந்த அன்று, பிரைட் ஏசியா கன்ஸ்ட்ரக்ஷனைச் சேர்ந்த 14 தொழிலாளர்களுடன் திரு ஹொசைன் மற்றும் திரு சுகுணன் ஆகியோர் லாரியின் பின்புறத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
விபத்து நடந்த அன்று காலை, டிரக் டிரைவர் தனது வாகனத்தை எவர்கிரீன் வேஸ்ட் மேனேஜ்மென்ட்டில் பதிவுசெய்து, PIE இன் 3 அல்லது 4 லேன் வழியாக சாங்கி நோக்கிச் சென்றபோது, டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது. ஜலான் பஹார் Exit முன் அவர் டிரக்கை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார், ஆனால் சாலை குறுகலாக இருந்ததால், டிரக் 5-வழி வண்டிப்பாதையின் 5வது லேனில் நீண்டு சென்றது. அப்போது தான் 14 நபர்கள் சம்மந்தப்பட்ட அந்த விபத்து நடந்தது.
சம்பவ இடத்தில் இருந்த துணை மருத்துவர்கள் லாரியின் பின்பகுதியில் ஹொசைன் மற்றும் திரு சுகுணன் சிக்கியிருப்பதை கண்டனர். மாரடைப்பில் இருந்த திரு ஹொசைனை மீட்க அவர்களுக்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்பட்டன. உடனடியான மருத்துவ தலையீடு இருந்தபோதிலும் அன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். திரு சுகுணனும் லாரியின் பின்புறத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார், மற்ற 14 தொழிலாளர்கள் பல்வேறு காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் சுயநினைவோடு இருந்தனர்.
திரு சுகுணன் காலை 7.46 மணியளவில் சுயநினைவற்ற நிலையில் இருந்தார் சிகிச்சைக்கு பிறகு அவரது நாடித் துடிப்பு திரும்பியது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில் அவர் உயிர் பிறந்தது.