சிங்கப்பூரில் பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழிகளை பேசும், பல்வேறு மதத்தை பின்பற்றும் மக்கள் ஒன்றிணைந்து வாழ்கின்றர் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். எனவே சிங்கப்பூரை சேர்ந்த மக்கள் அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொண்டு சகிப்புத்தன்மையுடன் வாழ்வதில் முன்னணி வகிப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.
சிங்கப்பூரில் இஸ்லாம், கிறிஸ்தவம், சீன நாட்டைச் சேர்ந்த பல்வேறு சமயங்கள் பின்பற்றும் மக்கள் மற்றும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த சமயங்கள் பின்பற்றும் மக்கள் இருந்த போதிலும் பத்தில் ஒன்பது சிங்கப்பூர் மக்கள் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களையும் அனுசரித்து வாழ்வதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் சமயங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான மக்களிடம் கேட்கப்பட்ட கேள்வியில் அனைத்து சமயங்களும் உயர்வானவை தான் என்று கருத்து கூறியுள்ளனர். பத்தில் மூன்று பேர் மட்டுமே தங்களது சமயம் உயர்வான சமயம் என்று கருதுகின்றனர் மீதி ஏழு பேர் அனைத்து சமயத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக உள்ளனர்.
எனவே இதன் மூலம் மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் உயர்ந்த சகிப்புத்தன்மையுடன் வாழ்வதாக தெரியவந்துள்ளது. ஆய்வில் கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர் எனவும் சிங்கப்பூரைச் சேர்ந்த 2000 மக்கள் கலந்து கொண்டனர் எனவும் தெரிவித்துள்ளனர்.