TamilSaaga

சிங்கப்பூரில் கோவிட் கட்டுப்பாட்டை மீறி வெளியே சுற்றிய நபர்.. சிறை தண்டனையுடன் அபராதம் விதிப்பு

சிங்கப்பூரில் 20 வயதான ஒருவருக்கு நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 2) சுவாசக் குழாய் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டது. இருப்பினும் அவர் அதனை மீறியதால் கோவிட் -19 உத்தரவுகளை மீறியதற்காகவும், கடந்த ஏப்ரல் மாதம் சர்க்யூட் பிரேக்கரின் போது தனது நண்பரைச் சந்தித்ததற்காகவும் $ 11,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கோர்டன் வோங் ஜுன் யுவான் தனது நண்பரை சந்திப்பதற்காகவும் முடி வெட்டுவதற்கும் குறைந்தபட்சம் நான்கு முறை கோவிட் விதிகளை மீறினார் எனவும் இது கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கோவிட் -19 விதிமுறைகள் 2020 இன் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார், ஒன்று தொற்று நோய்கள் (கோவிட் -19 ஸ்டே ஆர்டர்கள்) விதிமுறைகள் 2020 மற்றும் மற்றொரு தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் அதனை பின்பற்றாத குற்றமாகும். இதேபோன்ற மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் தண்டனைக்கு பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

வறண்ட இருமல், தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் காரணமாக வாங் புக்கிட் மெரா பாலி கிளினிக்கிற்கு கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி சென்றதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது. அவருக்கு ஐந்து நாட்களுக்கு மருத்துவ சான்றிதழ் (MC) வழங்கப்பட்டது மற்றும் அந்த காலத்தில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கூறப்பட்டது.

ஆனால் அவர் அடுத்த நாள் புகைபிடிப்பதற்காகவும் தனது நண்பர்களுக்கு வீடியோ அழைப்புகள் செய்வதற்காகவும் தனது வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த ஆண்டு மே 4 அன்று, சர்க்யூட் பிரேக்கர் நடைமுறையில் இருந்தபோது, ​​அவர் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் உணவு மற்றும் பானங்கள் வாங்கவும் புகைபிடிப்பதற்காகவும்வெளியேறி தனது ஒரு நண்பரையும் சந்தித்தார்.

அதிகரித்து வரும் கோவிட் -19 வழக்குகளைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் கடந்த ஆண்டு ஏப்ரல் 7 முதல் ஜூன் 1 வரை சர்க்யூட் பிரேக்கரை விதித்தது. அந்த காலகட்டத்தில், மக்கள் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு மே 15 ஆம் தேதி, வாங் இதே போன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்ததால், மீண்டும் கிளினிக்கை அணுகினார். அப்போதும் வீட்டில் தங்குவதற்கான உத்தரவுடன் ஐந்து நாள் MC வழங்கப்பட்டது.
இருப்பினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் வசித்த டெலோக் பிளாங்கா பகுதியில் பீர் குடிக்க மற்றும் புகைப்பிடிக்க தனது நண்பரை சந்தித்தார்.

அவர் முடி வெட்டுவதற்காக கடந்த ஆண்டு மே 19 அன்று மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் தனது மருத்துவ அதிகாரி மருத்துவ விடுப்பு காலத்தில் அவர் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்து குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி அதிகாரியிடம் புகார் அளித்த பிறகு வாங் கைது செய்யப்பட்டார்.

கோவிட் -19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் ஒவ்வொரு குற்றத்திற்கும், வாங்கிற்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் $ 10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிக்கிறது.

Related posts