தூங்காதே தம்பி தூங்காதே, உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று பல தமிழ் திரையிசை பாடல்களை கண்டு நமக்கு நிச்சயம் ஒருமுறையாவது சிலிர்த்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் உத்வேகமான பல திரையிசை பாடல்களை தினமும் கேட்டு கேட்டு வாழ்க்கையில் முன்னேறியவர்கள் பலர். இந்நிலையில் உழைத்து உண்பதே சாலச்சிறந்தது என்பதை நிரூபிக்க வயது தேவையில்லை என்பதை உணர்த்தியுள்ளார் இந்த 89 வயது சிங்கை சிங்கம். கொஞ்சம் வயசான சிங்கம் தான் ஆனால் சீற்றம் துளிகூட குறையவில்லை.
நமது சிம் லிம் டவரின் அருகில் நீங்கள் சென்றுருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் அதன் அடிவாரத்தில் ஒரு ஐஸ்கிரீம் கடையை (வண்டியை) பார்த்திருப்பீர்கள். அது நம்ம Ng தாத்தா தான், சுமார் இருபது ஆண்டுகளாக இந்த தொழிலை மேற்கொண்டு வரும் அவரையும் இந்த பெருந்தொற்று விட்டுவைக்கவில்லை. இருப்பினும் அவர் விட்டுக்கொடுத்தபாடில்லை. இந்த ஆண்டு 89 வயதாகும் Ng என்று அழைக்கப்படும் அவர், இன்றும் தனது ஐஸ்கிரீம் வண்டியில் (இருசக்கர வாகனத்தோடு இணைக்கப்பட்ட வண்டி), கடற்கரை சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஜாலான் பெசாரில் உள்ள சிம் லிம் டவர் வரை வந்து விற்பனை செய்கின்றனர்.
Ng வழக்கமாக மதிய உணவின் போது கடையை திறந்து அதன் பிறகு பிற்பகல் முடியும் நேரம் வரை Ice Creamகளை விற்பனை செய்து வருகின்றார். கூன் விழுந்த உடலுடன் காண்பாட்டாலும் தாத்தா எப்போதும் சோர்ந்து கிடையாது. பல வாலிபர்கள் உழைக்க பயப்படும் இந்த காலத்தில் 89 வயதிலும் உழைத்தே உண்பேன் என்று கெத்தாக சுற்றும் இந்த தாத்தா உண்மையில் வேற லெவல் தான்.