சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் Its Raining Rain Coats என்ற தொண்டு நிறுவனம் பல ஆண்டுகளாக தங்களால் இயன்ற உதவிகளை சிங்கப்பூரில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு செய்துவருகிறது. குடும்பத்தை பிரிந்து வாடும் நமது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேண்டிய பல அடிப்படை உதவிகளை செய்து வருகின்றது.
இந்நிலையில் சிங்கப்பூரில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 35 புதிய சைக்கிள்களை வழங்கி வசதியுள்ளது. இந்த உதவியை செய்ததற்காக லயன் கிளப் ஆஃப் சிங்கப்பூர், கேலக்ஸிக்கு அந்த நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தோல் கொடுக்கும் ItsRainingRainCoats
இந்த சைக்கிள்களை பயன்படுத்தி அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க முடியும், மற்றும் அவர்களின் நேரத்தையும், சக்தியையும் இதன் மூலம் மிச்சப்படுத்தலாம் என்றும் அந்த நிறுவனம் வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் லாரிகளில் பயணிக்கும் அதே நேரத்தில் அலுவலகம் சற்று அருகாமையில் உள்ள தொழிலாளர்கள் அந்த தூரத்தை நடந்தே கடக்கும் நிலை அவ்வப்போது ஏற்படும். ஆகையால் அவர்களுக்கு வழங்கப்படும் இந்த சைக்கிள் தொழிலாளர்களுக்கு பெரிய அளவிலான சுமையை குறைக்கும் என்றே கூறலாம்.
கடந்த 2019ம் ஆண்டு தமிழக தொழிலாளி வேல்முருகன் என்பவர், சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில் பணியிடத்தில் நடந்த விபத்தில் ஒன்றில் பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் அவருடைய குடும்பத்திற்கு உதவும் வகையில் Its Raining Rain Coats நிறுவனர் திருமதி. தீபா சுவாமிநாதன் வேல்முருகனின் உடலை அவர் தாயகம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார்.
மேலும் அவருடைய குடும்பத்திற்காக சிங்கப்பூர் முழுவதும் நிதி திரட்டப்பட்டு சுமார் S$57,000 (இந்திய மதிப்பில் சுமார் 30 லட்சம்) அவருடைய குடும்பத்தாரிடம் அள்ளிக்கப்பட்டதாகவும் தீபா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரை பொறுத்தவரை இன்றளவும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பல உதவிகளை அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.