சிங்கப்பூரில் பல துறைகளில் வேலை இருந்து வருகிறது. அதில் சில துறைகளுக்கு கோட்டா கட்டுப்பாடுகள் அதிகம். அதனால் இருக்கும் எல்லா நிறுவனங்களுமே ஒரு கட்டத்தில் பணிக்கு ஆட்களை எடுப்பதை நிறுத்தி விடும். ஆனால் சிங்கப்பூரில் ஒரு துறையில் மட்டும் எப்போதுமே வேலை என்பது இருந்து கொண்டு தான் இருக்கும்.
இந்த வேலைக்காக சிங்கப்பூர் வர வேண்டும் என்றால் உங்களுக்கு SPass கொடுப்பார்கள். ஆனால் படிக்காதவர்கள் வர முடியுமா எனக் கேட்டால் அவர்களுக்கும் இந்த நிறுவன முதலாளி நினைத்தால் SPass போட்டு சிங்கப்பூர் அழைத்து வர முடியும். சரி ரொம்ப நேரமாக குழப்பமா இருக்கா. அந்த துறை தான் கேட்டரிங்.
சிங்கப்பூரில் எப்போதுமே வேலைக்கு பஞ்சமே இல்லாத துறை என்றால் அது கேட்டரிங் தான். ஏனெனில் இங்கு நிறைய நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் தங்கி இருக்கும் டார்மெண்ட்ரியில் சமைக்க அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் பெரும்பாலானோர் வெளியில் தான் சாப்பிடுகின்றனர். மேலும் சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம். அதனால் எப்போதுமே ஹோட்டல்களில் வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
இதையும் படிங்க: கண்ணுல கெத்து…யாருக்கு மேன் வயசாச்சு… 67ல் வயது… Ziplineல் மாஸ் ரைட் போன பாட்டி… வீடியோ பாருங்க Goosebumpsக்கு நாங்க கியாரண்டி!
5 ஸ்டார் ஹோட்டல் தொடங்கி சின்ன சின்ன கடைக்களுக்கு கூட பாஸ்களில் வேலைக்கு ஆள் எடுப்பது இன்னமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. செஃப் முதல் க்ளினர் வரை வேலைக்கு ஆட்கள் எடுப்பார்கள். படித்தவர்களுக்கு மேனேஜ்மெண்ட் டிபார்ட்மெண்ட்டில் வேலை கிடைக்கும். டிப்ளமோ அல்லது டிகிரி கேட்டரிங் முடித்தாலும் நல்ல வேலையில் செட்டில் ஆகலாம்.
படிக்கவில்லை. ஆனால் நன்றாக சமைக்க தெரியும் எனக் கூறினால் உங்களை வெயிட்டராக வேலைக்கு எடுத்து சமைக்க பயன்படுத்தி கொள்வார்கள். சமைக்க தெரியாதவர்களுக்கு க்ளினீங் வேலைகள் இருக்கும். இதற்கு வொர்க் பெர்மிட் மற்றும் SPass, EPassல் வேலைக்கு வரலாம்.
ஏஜென்ட் கட்டணம் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை அதிகபட்சமாக கேட்கப்படும். சம்பளம் 2500 வெள்ளி வரை உங்களுக்கு கொடுப்பார்கள். இந்த துறைகளில் வேலை என்பதால் சொல்லப்படும் சம்பளம் கொடுக்கப்பட்டு விடும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். இந்த வேலைக்கு அப்ளே செய்ய வேண்டும் என்றால் நல்ல ஏஜென்ட்டினை தேர்வு செய்து, தேட கூறுவது சிறந்தது.
சிங்கப்பூரின் கருத்துக்கணிப்பினை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 2ல் இருந்து 3 ஹோட்டல்கள் கண்டிப்பாக திறக்கப்பட்டு விடும். இதனால் எப்போதுமே இந்த துறையில் வேலைக்கு பஞ்சம் இருக்காது எனக் கூறப்படுகிறது.