சிங்கப்பூரில் வேலைக்காக வரும் ஊழியர்கள் ஒவ்வொருவருமே தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்றால் அது பாதுகாப்பு தான். வேறு நாடுகளில் இருந்து வந்தாலும் இங்கிருக்கும் எல்லா மக்களும் முக்கியமாக ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கோர்ஸ்களை சிங்கப்பூர் மனிதவளத்துறை நடத்தி வருகிறது.
Workplace Safety and Health என்பது கட்டுமான துறையிலோ, கப்பல் கட்டும் இடத்திலோ வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து துறை ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டிய கட்டாய WSH பயிற்சி வகுப்பாகும். ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியரும் வேலையைத் தொடங்கும் முன் படிப்பை முடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு Skill அடிக்காமல் வரணுமா? அப்போ PSA தான் உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ்… இத படிங்க முத!
பணியிடங்களில் பணிகளை மேற்கொள்வதற்காக உடலுழைப்பில் பணிபுரியும் எந்தவொரு தொழிலாளியும் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சி வகுப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இதில் ஃபெயில் ஆனால் இரண்டாவது முறை ட்ரை செய்யலாம். அப்பொழுதும் தோல்வி அடைபவர்கள் நாட்டிற்கு திரும்ப தான் வேண்டும். இரண்டு நாட்கள் வகுப்பு நடக்கும். முதல் நாளில் பாதுகாப்பாக வேலை செய்வது குறித்து அதிகாரிகள் மூலம் வகுப்புகள் நடக்கும். இரண்டாவது நாள் ப்ராக்டிக்கல் தேர்வு இருக்கும்.
பாதுகாப்பு கவசம் மாட்டுவது குறித்தும் சொல்லித்தரப்படும். காதில் இயர்ப்ளக்கில் தொடங்கி கடைசியாக கை க்ளவுஸ் வரை சொல்லி தரும் வரிசையில் மாட்டப்பட வேண்டும். கழட்டும் போது ரிவர்ஸில் செய்ய வேண்டும். இது தான் பெரும்பாலும் வகுப்புகளில் சொல்லி தரப்படும்.
இதையும் படிங்க: லட்சத்தில் காசு கொடுக்க முடியாதா? கவலையை விடுங்க… Skilled Test இருக்கு… பாஸ் பண்ண என்ன செய்யணும் தெரியுமா… இத படிங்க முழுசா…
பிராக்டிக்கலில் பாதுகாப்பு கவசம் அணுவிப்பது முதல் பணியிடங்களில் வேலை செய்யும் முறை சொல்லி தரப்படும். அன்றைய நாளிலே தேர்வு நடத்தப்படும். எழுத்து தேர்வு சாய்ஸ் டிக் செய்வது போல தான் அமைக்கப்பட்டு இருக்கும்.
இதற்கு முதல் முறை கம்பெனியே ஃபீஸ் கட்டுவிடுவார்கள். தமிழில் எக்ஸாம் இருக்கும் என்பதால் ஃபெயில் ஆவதற்கு வாய்ப்பு குறைவு தான். ஆனால் நீங்க ஃபெயில் ஆகினால் மீண்டும் தேர்வுக்கு நீங்க தான் ஃபீஸ் கட்ட வேண்டி இருக்கும். இதற்கு 120 சிங்கப்பூர் டாலர் வரை கேட்கப்படும்.