சிங்கப்பூரில் வேலைக்காக வந்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஒரு கம்பெனி நிர்வாகத்திடம் வேலை செய்யும் போது மீதம் இருக்கும் நேரத்தில் பார்ட் டைம் வேலை செய்யலாமா என்ற சந்தேகம் வருகிறதா உங்களுக்கு. அப்போ இந்த பதிவினை தொடர்ந்து படியுங்க உங்களுக்கான எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.
வெளிநாட்டில் வேலைக்கு செல்லலாம் என்ற முடிவு வந்தவுடனே அதிகம் பேர் ஆசைப்படும் முக்கிய நாடாக இருப்பது சிங்கப்பூர் தான். அதற்கு காரணம் சிங்கப்பூரில் இருக்கும் போது உங்களின் தாய் நாடாக தமிழ்நாட்டை மிஸ் செய்யவே முடியாது. இங்கிருக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் இருக்கும் 90 சதவீதம் பேர் தமிழர்கள் தான் என்பது இதற்கு முக்கிய காரணமாகிறது.
படித்தவர்களுக்கு SPass மற்றும் EPass என்ற வொர்க் பாஸ்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் அடிப்படை ஊதியமாக மாதத்திற்கு குறைந்தபட்சம் 3300 சிங்கப்பூர் டாலரில் இருந்து கொடுக்கப்பட வேண்டும். இதை சில நிறுவனங்கள் சரியாக செய்து வந்தாலும் பல நிறுவனங்கள் அதை தவறிவிடுவதாக கூறப்படுகிறது.
அதிலும் இன்றளவில் சிங்கப்பூரில் நிலவும் பிரச்னையால் வொர்க் பாஸின் கோட்டாக்கள் எதுவும் பெரிய அளவில் வெளியாகவில்லை. இதனால் SPass அப்ளே செய்தால் கூட கிடைக்காத நிலைமையே உருவாகி வருகிறது. இந்த பிரச்னை விரைவில் சரி செய்ய சிங்கை மனிதவளத்துறை சார்ப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
படிக்காமல் அனுபவத்தில் சிங்கப்பூர் வருபவர்கள் வொர்க் பெர்மிட் மற்றும் PCM பெர்மிட்டில் சிங்கப்பூர் வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை ஊதியமாக 1200 சிங்கப்பூர் டாலர் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தாலும் தினமும் ஊழியர்களுக்கு $18 முதல் $22 சிங்கப்பூர் டாலர் வரை தான் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதையும் படிங்க: சிங்கையில் இருக்கும் தமிழரா நீங்க… SingPass ஓபன் செய்வது எப்படி… இதற்கு Eligibleஆக என்ன செய்யணும்?
இதனால் பலருக்கும் இருக்கும் பொதுவான பொருளாதார பிரச்னையால் இருக்கும் மிச்ச நேரத்தில் எதுவும் பார்ட் டைம் வேலை செய்யலாமா என்ற ஆசை தோணும். அப்படி உங்களுக்கும் தோன்றினால் கண்டிப்பாக அதை நீங்க செய்யவே கூடாது. உங்களை எந்த நிறுவனம் வேலைக்காக சிங்கப்பூர் அழைத்து வந்ததோ அந்த நிறுவனத்துக்கு கீழ் மட்டுமே உங்களால் வேலை செய்ய முடியும்.
அப்படி வேறு வேலை செய்தால் உங்களின் பெர்மிட் உடனே கேன்சல் செய்யப்பட கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் நீங்க எந்த கம்பெனி நிர்வாகத்தின் கீழ் வேலை செய்ய சிங்கப்பூர் வந்தீர்களோ அங்கையே வேலை செய்ய வேண்டும். பேறு இடத்தில் வேலை செய்ய கூடாது.