24 வயதான சிங்கப்பூர் மாணவர், சியோங் ஜியா ஜின், 37 வயதுப் பெண்ணை சுயநினைவை இழக்கும் வரை அவரை மூச்சுத் திணறடித்ததற்காக எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார். அந்த பெண்ணின் மீது அடக்கு முறையை கையாண்ட மற்றொரு குற்றச்சாட்டும் அவரது தண்டனையின்போது கருத்தில்கொள்ளப்பட்டது.
நடந்தது என்ன?
மதர்ஷிப் செய்தி நிறுவனம் கண்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் நடுப்பகுதியில், சியோங் என்ற அந்த 24 வயது இளைஞர் வாடகை செலுத்தி dating செல்ல உதவும் ‘maybe.sg’ என்ற இணையதளத்தின் மூலம் ஒரு Dating செல்ல புக் செய்துள்ளார். பின்னர் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கண்டு அவருடன் Dating செய்ய பதிவு செய்துள்ளார். GAG Order காரணமாக அவரது பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை. இந்நிலையில் அவர் Dating புக் செய்த அதே நேரத்தில், சியோங் பாதிக்கப்பட்ட பெண்ணை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டார் ஆனால் அந்த பெண்ணை Dating செய்ய புக் செய்திருப்பதை அவர் அந்த பெண்ணிடம் கூறவில்லை.
கடந்த அக்டோபர் 26, 2020 அன்று மாலை 6 மணியளவில், சியோங் பாதிக்கப்பட்டவரை சந்தித்துள்ளார். அவர்கள் சாங்கி ஜுராசிக் மைலுக்குச் சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே இருந்துள்ளனர். சரியாக இரவு 7:30 மணியளவில், சாங்கி விமான நிலையத்தின் Terminal 4-ன் கார்பார்க் 4A-ன் Level 4 படிக்கட்டு அருகில் அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார். நீதிமன்ற ஆவணங்களில் கூறப்பட்டுள்ளபடி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் டிக்டாக் வீடியோ ஒன்றை அந்த பெண்ணுடம் இணைந்து பதிவு செய்ய விரும்புவதாக சியோங் கூறியுள்ளார். இந்நிலையில் அவர்கள் கார்பார்க்கின் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தபோது, அருகில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்ய அவர் ஒவ்வொரு மடியில் உள்ள கதவையும் திறந்துபார்த்துள்ளார்.
Level 4 படிக்கட்டு இறங்கும் இடத்தில் யாரும் இல்லையென்பதை உணர்ந்த அவர், அந்த பெண்ணுடன் டிக்டாக் வீடியோவை பதிவு செய்வதற்காக. தீயை அணைக்கும் கருவியைக் கொண்ட கேபினட் மீது தனது மொபைல் போனை வைத்து வீடியோ எடுக்க ஆயத்தமானார். சுவற்றில் சாய்ந்திருந்த அந்த பெண்ணை நோக்கி சென்ற அவர்சற்றும் எதிர்பாராத நேரத்தில் தனது வலது முன்கையை அந்த பெண்ணின் கழுத்தில் சுற்றி இருக்கத்துவங்கினர். சில காலங்களுக்கு முன்பு அவர் கற்றுக்கொண்ட தற்காப்பு கலையில் இருந்து ஒரு யுக்தியை அவர் அந்த பெண்ணின் மீது பயன்படுத்தியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் சுமார் 15 வினாடிகள் கடுமையாக போராடி, சுயநினைவை இழந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை சுயநினைவை இழக்கச் செய்ய சியோங் எண்ணியதாகவும், அந்த மூச்சுத் திணறலால் அந்த பெண் இறக்கும் அபாயம் இருப்பதை அந்த நபர் அறிந்திருந்தார் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. இதனையடுத்து அந்த பெண் சுயநினைவின்றி இருந்தபோது, சியோங் அந்த பெண்ணை தரையில் கிடத்தி, உடல் ரீதியாக கிளர்ந்தெழுந்த தன் காமப்பசிக்கு உணவளிக்க அந்த பெண்ணை தொட அந்த பெண்ணின் சட்டையைத் உயர்த்த முடிவு செய்தான். அந்த பெண்ணின் சட்டையை அவளது தொப்புள் பகுதி வரை தூக்கி, அதன் பிறகு அதற்கு மேல் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தான். சில நொடிகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் விழித்தபோது, சியோங்கின் மடியில் தான் இருப்பதை கண்டார். திடுக்கிட்டு எழுந்து தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு பயத்தில் படிக்கட்டில் இறங்கி ஓடினார். நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த பெண் கார் பார்க்கிங் பகுதியை நோக்கி ஓடி உதவிகேட்டு கத்தியுள்ளார்.
அதிர்ச்சியில் இருக்கும்போதே, யாரோ தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக அங்கிருந்த ஓட்டுநரிடம் கூறினார்.
டிரைவரின் ஆலோசனையின் பேரில், அவர் போலீசில் புகார் செய்தார். கழுத்தை நெரித்த பிறகு தான் தப்பித்துக்கொண்டதாகவும், உதவி தேவைப்படுவதாகவும் போலீஸிடம் கூறினார். உடனடியாக போலீசார் அதே இரவே சியோங்கை தொடர்பு கொண்டனர். தாக்குதலின் பெரும்பகுதி அவரது தொலைபேசியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் அன்று இரவு 10:05 மணியளவில் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அவரது மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், அவரது கழுத்து பகுதி மற்றும் வலது முழங்காலில் சிராய்ப்பு இருந்தது. அந்த பெண்ணுக்கு நான்கு நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் கவலை மற்றும் பீதி அடைந்த மனநிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அக்டோபர் 28, 2020 அன்று, சியோங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, மனநலக் கண்காணிப்பிற்காக இரண்டு வாரங்களுக்கு மனநலக் கழகத்தில் (IMH) காவலில் வைக்கப்பட்டார். IMH அறிக்கையின்படி, சியோங்கிற்கு ADHD வரலாறு உள்ளது என்றும், ஆனால் தற்போது அந்த பாதிப்பு இல்லை என்றும் கூறியது. தற்போது அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டு 8 மாத சிறை விதிக்கப்பட்டுள்ளது.