TamilSaaga

“இதே வேலையாத்தான் இருந்துருப்பான் போல” : சிங்கப்பூரில் பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த ஆசாமி

சிங்கப்பூரில் 30 வயது ஆடவர் ஒருவர், தான் வசித்த வந்த Flat உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஒரு பெண் நடந்து செல்வதைக் பார்த்துள்ளார். அந்த பெண் கொஞ்சம் கவர்ச்சியாக அவருக்கு தெரிந்த நிலையில் அந்த பெண்ணை பின்தொடர்ந்து அவரின் Flat எண்ணையும் குறித்துக் கொண்டான். இந்நிலையில் அந்த மாதத்தின் பிற்பகுதியில், சற்றே திறக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் வீட்டு பால்கனி வழியாக அவரது குடியிருப்பில் நுழைந்து, அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளான்.

“என் புருஷன் ஜெயிச்சிட்டாரு”! ஊரே வேடிக்கை பார்க்க கணவரை அலேக்காக தூக்கிய மனைவி – அடேங்கப்பா!

இந்நிலையில் அந்த நபருக்கு இன்று புதன்கிழமை (மார்ச் 9) நீதிமன்றத்தில் 10 மாதங்கள் மற்றும் 14 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது உள்பட அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன. GAG ஆர்டர் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் மற்றும் குற்றங்கள் நடந்த முகவரிகள் குறித்து தகவல் வெளியிட நீதிமன்றம் மறுத்துள்ளது.

நடந்தது என்ன?

ஜூலை 29, 2020 அன்று காலை, அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடியிருப்பிற்குச் சென்றுள்ளான். வீட்டில் வேறு யாரும் இல்லாததை அறிந்து பால்கனி கதவைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளான். குளியலறை கண்ணாடியில் தெரிந்த பிரதிபலிப்பின் மூலம், பாதிக்கப்பட்ட பெண் குளிப்பதைப் பார்ததுமட்டுமல்லாமல் அவனது மொபைல் ஃபோன் மூலம் அவர் குளிப்பதை இரண்டு வீடியோக்களாக எடுத்துள்ளான். ஒவ்வொரு வீடியோவும் சுமார் இரண்டு நிமிட நீளம் கொண்டது என்று கூறப்படுகிறது, இறுதியில் அந்த நபர் மீண்டும் பால்கனி வழியாக வெளியேற முயற்சித்துள்ளான்.

சிங்கப்பூர் Sex பயிற்சியாளர் : கருப்பையின் சிறப்பை உணர்த்தும் NFT-கள் விற்பனைக்கு – குவியும் மக்களின் பாராட்டு

அவன் வெளியேற பால்கனிக்கு சென்றபோது, அந்த பெண் ஒரு நபர் தனது படுக்கையறை ஜன்னல் வழியாக ஏற முயற்சிப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று கூச்சலிட, அவன் அங்கிருந்து விரைவாக தப்பி ஓடியுள்ளான். பாதிக்கப்பட்ட அந்த பெண் உடனே போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். போலீசார் வந்து விசாரித்த பிறகு தான் அந்த நபர் இதற்கு முன்பே இதேபோல அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மற்றொரு பெண்ணின் வீடியோக்களை எடுத்ததாக தெரியவந்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts