TamilSaaga

“சிங்கப்பூரில் பாடகி Nadya Dean காலமானார்” : சோகத்தில் சக கலைஞர்கள் – இறப்புக்கு “இதுதான்” காரணம்

சிங்கப்பூரில் உள்ளூர் பாடகி, ராப்பர் மற்றும் பாடலாசிரியர் நாத்யா டீன் சுமார் 11 நாட்கள் சுயநினைவின்றி இருந்த நிலையில் சிங்கப்பூர் சாங்கி பொது மருத்துவமனையில் (CGH) கடந்த அக்டோபர் 31 அன்று இறந்தார் என்று மருத்துவமனை செய்தி வெளியீட்டில் கூறப்பட்டது, அவருக்கு வயது 27. அவரது தந்தை, திரு டீன் காசிம், தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறுகையில், இறப்புக்கான காரணம் “எக்லாம்ப்சியா” என்று கூறினார்.(Eclampsia என்பது கர்பிணி பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்த நிலை). இந்த நிலையில் நோயாளி கர்ப்பத்தின் காரணமாக உயர் இரத்த அழுத்தத்தால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அவர் கடந்த அக்டோபர் 15 அன்று ஒரு குறைமாத ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இது அவருடைய இரண்டாவது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 20ம் தேதி சுயநினைவை இழந்த அவர் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நூர் அதிகா நதியா அப்துல் காதிர் என்ற இயற்பெயர் கொண்ட பாடகர், மக்கள் சங்கத்தின் கீழ் உள்ள குடிமை மையம் மற்றும் சமூக மையமான விஸ்மா கெயிலாங் செராய் ஏற்பாடு செய்த பாடல் போட்டியான Suara WGS 2.0ல் சமீபத்தில் இறுதிப் போட்டியாளராக இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

அவர் வெற்றி பெறவில்லை என்றாலும், மற்ற போட்டியாளர்களுக்கு பாடல்களை எழுதி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015 இல், இங்கு நடைபெற்ற கரோக்கி உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பெரிட்டா ஹரியான் அறிக்கையின்படி, ஆகஸ்ட் மாதம் உட்லண்ட்ஸ் சமூக கிளப்பில் நடந்த தேசிய தின நிகழ்வில் அவரது கடைசி நடிப்பு அரங்கேறியது.

அவருக்கு 1½ வயதுள்ள நூர் அரியன்னா நசுஹா என்ற மகள் உள்ளார், அவரது கணவர் நஷ்ரிக் சானியும், ஒரு இசைக்கலைஞர்.

Related posts