TamilSaaga

சிங்கப்பூரில் மீண்டும் “நேரடி லாட்டரி குலுக்கல்..” இரண்டு ஆண்டிற்கு பிறகு நாளை துவக்கம்.. பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதி – Singapore Pools அறிவிப்பு

சிங்கப்பூரில் பெருந்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 2020 தொடக்கத்தில் இடைநிறுத்தப்பட்ட பின்னர், நேரடி பார்வையாளர்களுடன் லாட்டரி குலுக்கல்கள் நாளை வியாழன் முதல் மீண்டும் தொடங்கும் என்று இன்று புதன்கிழமை (மே 4) வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி பார்வையாளர்களுடனான முதல் குலுக்கல், சிங்கப்பூர் பூல்ஸ் கட்டிடத்தில் நடைபெறும். இது மே 5 அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி TOTO டிரா எண் 3762/2022-லிருந்து நடைமுறைக்கு வரும்.

“எல்லா லாட்டரி குலுக்கல்களும் கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின்படி நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு பொதுக் கணக்கியல் நிறுவனம் முன்னிலையில் அது நடைபெறும்,” என்று சிங்கப்பூர் பூல்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த டிராவைக் காண பொதுமக்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் தங்கள் தடுப்பூசி நிலையை சரிபார்க்கவோ அல்லது பாதுகாப்பான நுழைவுச் சோதனைகளை மேற்கொள்ள தேவையில்லை.

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்ணை கொடூரமாக கொன்ற “காயத்ரி முருகையன்” – முழு தகவல்

ஆனால், தற்போதுள்ள பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளின்படி, அவர்கள் எப்போதும் உட்புற நடவடிக்கைகளில் தங்கள் முகமூடிகளை அணிந்திருக்க வேண்டும். “எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு இந்த நடவடிக்கைகள் அவசியம் என்பதை நாங்கள் அறிவுறுத்த விரும்புகிறோம்” என்று சிங்கப்பூர் பூல்ஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலை தேடும் தமிழர்கள்.. சிங்கை வரும் முன் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய Top 6 விஷயங்கள் என்னென்ன? பல Exclusive தகவல்கள்

“மேலும் கூடுதல் தகவல்களை பெற வாடிக்கையாளர்கள், 6786 6688 என்ற எண்ணில் எங்கள் வாடிக்கையாளர் சேவை ஹாட்லைனைத் தொடர்பு கொள்ளலாம்” என்றும் சிங்கப்பூர் Pools தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts