TamilSaaga

சிங்கப்பூர் செராங்கூன் குடியிருப்பு பகுதியில் ‘தீ’ – SCDF வருவதற்கு முன் களத்தில் இறங்கிய மக்கள்

சிங்கப்பூரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகுஸ்ட் 15) மதியம், 209 செராங்கூன் சென்ட்ரலில் வசிப்பவர்கள் அந்த பகுதியில் கடுமையான புகை மண்டலத்தை கண்டனர். இந்நிலையில் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த மறுசுழற்சி தொட்டி ஒன்றில் ஏற்பட்ட தீ தான் இந்த புகை மண்டலத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையை (SCDF) தொடர்பு கொண்ட அதே நேரத்தில், ​​பல குடியிருப்பாளர்கள் இணைந்து தீ அணைப்பான்களை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த குடியிருப்புக்கு அருகிலுள்ள 7-லெவனில் இருந்து ஒரு தீயணைப்பானையும், பக்கத்து வீட்டு ஒன்றிலிருந்து மற்றொன்றையும் பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தார். இருப்பினும், தீயை அணைக்கும் கருவிகள் போதுமானதாக இல்லை. ஆனால் நல்வாய்ப்பாக, SCDF தீயை நிறுத்த சரியான நேரத்தில் அங்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஒரு தீயணைப்பு கருவியைப் பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது. மேலும் இந்த தீ சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை மற்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts