சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தினை அதிகரிப்பது தொடர்பான நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான புள்ளி விவரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.ஆய்வானது 650 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 3400 நிபுணர்களிடம் நடத்தப்பட்டது. இந்நிலையில் 72% சிங்கப்பூர் நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் வருகின்ற ஆண்டில் வேலைக்கான போட்டித் தன்மையும் அதிகமாக இருக்கும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வேலைக்கான போட்டியானது கடுமையாக இருந்தாலும் 43 சதவீதம் நிறுவனங்கள் புதிதாக திறன் மிகுந்த வேலையாட்களை பணிக்கு அமர்த்த திட்டமிடுவதாக தெரிவித்துள்ளன.கொரோனா நோய் தொற்றுக்குப் பின்பு புதிதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது குறைந்திருந்தாலும் திறன் வாய்ந்த ஊழியர்களை வேலைக்கு அமத்துவதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது. மேலும் ஊழியர்களின் வேலைவாய்ப்பினை கணக்கில் கொள்ளும் பொழுது தற்பொழுது வாங்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் பெறுவதற்காக ஊழியர்கள் மற்றொரு பணிக்கு மாற விருப்பம் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒட்டு மொத்த ஆய்வினை கணக்கில் கொள்ளும் பொழுது ஊழியர்களின் ஊதியம் ஆனது அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.