சிங்கப்பூரில் Jurong East MRT station ஐ miniature diorama வாக செய்து, அதை அந்த ஸ்டேஷன் மேனேஜருக்கே பரிசாக அளித்து அசர வைத்துள்ளார் ஐடி இன்ஜினியர் ஒருவர். இவர் செய்த இந்த செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பலரிடமும் பாராட்டையும் பெற்றுள்ளது.
Anthony Ong என்ற 33 வயது இளைஞர், சிங்கப்பூரில் உள்ள உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் senior Information Technology (IT) executive ஆக பணியாற்றி வருகிறார். இவர் தான் இந்த Jurong East MRT station னின் மினி மாடலை உருவாக்கியவர். East MRT station னின் miniature diorama வை உருவாக்கிய Anthony Ong, அதை தான் எப்படி உருவாக்கினோம் என்ற வீடியோவை @likeants என்ற பெயனாளர் கணக்கில் இருந்து டிக்டாக்கில் 3 வீடியோக்களாக வெளியிட்டுள்ளார். முதல் வீடியோவை ஏப்ரல் 07ம் தேதி பதிவிட்டுள்ளார்.
டிக்டாக்கை கலக்கும் வீடியோ :
முதல் வீடியோவில் diorama வை ஒழுங்கமைப்பது, ஸ்டேஷனின் பெயர் அடங்கிய லேபிள்களை பொருத்துவது போன்ற காட்சிகள் அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட இரண்டாவது வீடியோவில், முதல் வீடியோவில் இருந்த சில காட்சிகளும், அதோடு, கூடுதலாக diorama வின் வெளிப்புற கதவுகளை எவ்வாறு பொருத்தினார் என்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. மூன்றாவது வீடியோவில் அந்த diorama வை ஸ்டேஷன் ஊழியருக்கு பரிசாக வழங்கிய காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
குவியும் பாராட்டுக்கள் :
Anthony Ong, ஸ்டேஷன் மேனேஜருக்கு அந்த diorama ஐ பரிசாக வழங்குவது, அதை அவர் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வது போன்ற போட்டோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்படி ஒரு diorama ஐ செய்து தங்களின் ஊழியரை மகிழ்வித்ததற்காக நன்றி தெரிவித்தும், அதை வடிவமைப்பதற்காக Anthony Ong எடுத்துக் கொண்ட முயற்சி, அவரது உழைப்பு ஆகியவற்றை பாராட்டியும் SMRT ன் அதிகாப்பூர்வ டிக்டாக் பக்கத்தில் கருத்து பதிவிடப்பட்டுள்ளது.
diorama ஐ உருவாக்கிய அனுபவம் :
Jurong East MRT station diorama மாடலை செய்வதற்கு தனக்கு 2 முதல் 3 வாரங்கள் ஆனதாகவும், basswood, foam, and 3D print resin ஆகியவற்றை பயன்படுத்தி இதை செய்ததாகவும் Anthony Ong தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் மிகவும் பிஸியான ஸ்டேஷன் Jurong East MRT station என்பதால் அதை உருவாக்க தான் விரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற மினியேச்சர்கள் செய்வது தான் அவருடைய பொழுதுபோக்காம். இதை கடந்த 3 ஆண்டுகளாக அவர் செய்து வருகிறாராம். இது போன்ற பல diorama க்களை செய்து விற்பனை செய்துள்ளதாகவும், இன்னும் பல diorama கள் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.