TamilSaaga

சிகரெட்டு கடத்திய சிங்கப்பூர் ஆடவர் – இரண்டாவது முறையாக 30 மாத சிறை

சிங்கப்பூரில் தீர்வை செலுத்தப்படாத (Duty Unpaid) சிகரெட்டுகள் தொடர்பிலான குற்றச் செயலில் ஈடுபட்டதாக சிங்கப்பூரைச் சேர்ந்த 57 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சுமார் 16 மில்லியன் வெள்ளி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிங்கப்பூரை சேர்ந்த இந்த ஆடவருக்கு 39 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ஆம் ஆண்டில் அண்டை நாடான மலேசியாவில் இருந்து தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை மலேசியா ஆடவர் ஒருவருடன் இணைந்து சிங்கப்பூருக்கு Loh Hu Seong கடத்தி உள்ளார் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடத்தி வந்த சிகரெட்டுகளை மறைத்து வைத்து மற்றுமொரு சிங்கப்பூரர் ஆடவருடன் சேர்ந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான தீர்வை செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.

Loh Hu Seong தீர்வை செலுத்தப்படாத சிகரெட் விவகாரத்தில் கைதாவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2016ம் ஆண்டு கைதாகி 30 மாத சிறை தண்டனை அனுபவித்துள்ளார் Loh.

Related posts