உலக அளவில் தற்போது பரவிவரும் புதிய வைரஸ் மறுபாட்டின் காரணமாக உலகின் பல நாடுகளும் தங்களுடைய எல்லைகளில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை தற்பொழுது விதித்துவருகின்றது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் Omicron வேறுபாட்டின் வைரஸ் சிலருக்கு பதிவாகியுள்ள உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது நமது சிங்கப்பூர் அரசும் தனது VTL பயணத் திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த மாற்றங்கள் வரும் டிசம்பர் 6ம் தேதி இரவு 11:59 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இனி சிங்கப்பூருக்குள் VTL மூலம் வந்தவர்கள் சுயமாக வாங்கப்பட்ட ART சுய பரிசோதனை கிட்களை கொண்டு சுய நிர்வாக சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சிங்கப்பூருக்கு வந்த 2,4,5,6 ஆகிய நாட்களில் செய்து அதற்கான ரிசல்ட்டை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இந்த சோதனைகள் அனைத்தும் நெகட்டிவாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெளியில் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இது ஏற்கனவே ART கிட்களை கொண்டு அவர்கள் சிங்கப்பூர் வந்தடைந்த 3ம் நாள் மற்றும் 7ம் நாளில், QTC எனப்படும் விரைவு சோதனை மையம் அல்லது ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் (CTC) சோதனை செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டதுடன் இணைக்கப்படும் என்றும் அறிவிப்பு.வெளியாகியுள்ளது. மேலும் 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த 2,4,5 மற்றும் 6ம் நாள் சோதனை தேவைப்படாது.
அதே போல டிசம்பர் 6ம் தேதிக்குள் VTL மூலம் சிங்கப்பூர் வருபவர்களுக்கும் இது பொருந்தாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 3ம் மற்றும் 7ம் நாள் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும்.