“சிங்கப்பூர் புக்கிட் பாடோக் பகுதியில் தீ” – விரைவாக செயல்பட்ட நபரை பாராட்டிய சிங்கப்பூர் SCDF
அந்த லாரியில் இருந்து 1,838 அட்டைப்பெட்டிகள் மற்றும் 703 பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மலேசியாவைச் சேர்ந்த ஓட்டுநரும், அவரது உதவியாளரும் மேலதிக விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத் துறைக்கு அனுப்பப்பட்டனர். சட்டவிரோதமான சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் லாரியின் பின்புறத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழ கூடைகளை ICA வெளியிட்ட புகைப்படங்கள் காட்டின.
கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி, ஏர் கண்டிஷனர் யூனிட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 கார்டன்கள் சுங்கவரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை சிங்கப்பூருக்கு கடத்தும் முயற்சியை நமது சிங்கப்பூர் ஆணையம் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் எல்லைகளைப் பாதுகாப்பது அதன் முதன்மையான கடமையாக உள்ளது என்று ICA கூறியது. சிங்கப்பூரை பாதுகாப்பாக வைத்திருக்க, கடத்தல் முயற்சிகளைக் கண்டறிந்து தடுக்க, ICA தொடர்ந்து பாதுகாப்புச் சோதனைகளை நடத்தும்” என்றும் தெரிவிக்கப்பட்டது.
வரி செலுத்தப்படாத பொருட்களை வாங்கவோ, விற்கவோ அல்லது கையாள்வோருக்கு 40 மடங்கு அபராதம் விதிக்கப்படும் மற்றும் ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.