கடந்த சில வருடங்களாகவே சிங்கப்பூரில் தங்குமிடங்களுக்கான வாடகை விண்ணை தொடும் அளவிற்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தங்கி வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளத்தியது என்றே கூறலாம்.
அதேபோல தங்களிடம் உள்ள தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி செய்து தரும் நிறுவனங்களுக்கும் இது பேரிடியாக மாறியுள்ளது. சிங்கப்பூர் ஒரு அறை கொண்ட கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை எதிர்வரும் காலங்களில் 500 வெள்ளி வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
புதிதாக சிங்கப்பூர் வரும் ஊழியர்கள் தாங்கள் வாங்கும் குறைந்தபட்ச சம்பளத்தில் பெரும் பங்கை வாடகைக்கு மட்டுமே கொடுக்கும் நிலை வந்துள்ளது. மேலும் தங்கள் தொழிலாளர்களுக்கு வீடு வசதி செய்து தரும் நிறுவனங்கள் இந்த வாடகை ஏற்றதால் புதிய வழியை கையாள முடிவு செய்துள்ளனர்.
அண்டை நாடான மலேசியாவின் ஜோஹார் பஹ்ருவில் உள்ள சில இடங்களில் தங்கள் ஊழியர்களை தங்க வைத்து, பின் அங்கிருந்து தினமும் சிங்கப்பூருக்கு வேலைக்கு அழைத்து வர அவர்கள் ஆவணம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மலேசியாவில் இன்னும் பெரிய அளவில் வாடகை ஏற்றம் இல்லை என்பதால் நிறுவனங்கள் இந்த முறையை கையளவிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல எல்லைகள் திறக்கப்பட்டு பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ச்சியாக சிங்கப்பூர் வருவதால் இந்த வாடகை ஏற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.