TamilSaaga

சிங்கப்பூரின் மிகப்பெரிய சினிமா தியேட்டர்… இலவசமாக சினிமா பார்க்கலாம்… உடனே முந்துங்கள் அனுமதி இலவசம் தான்!

சிங்கப்பூரில் ரொம்பவே கஷ்டப்பட்டு வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு ப்ரீயா படம் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சால் வேண்டானு சொல்ல முடியுமா என்ன? அப்படி ஒரு வாய்ப்பினை சிங்கப்பூரினை சேர்ந்த பிரபல திரையரங்கம் வழங்கி இருக்கிறது. அதுகுறித்து தெரிந்து கொண்டால் உங்களுக்கும் பயன்படும் தானே.

சிங்கப்பூரில் இருக்கும் மிகப்பெரிய திரையரங்கு ஷா தியேட்டர்ஸ் பாலஸ்டியர். இங்கு தான் ஒரே இடத்தில் 11 திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் உள்ள ஷா தியேட்டர்ஸ் பாலஸ்டியர் மறுசீரமைக்கப்பட்ட திரையரங்கு வியாழக்கிழமை வரும் மார்ச்.30ந் தேதி திறக்கப்பட இருக்கிறது.

இதன் காரணமாக அந்த நிறுவனம் 350 கப்புள் டிக்கெட்டினை இலவசமாக தர இருப்பதாக அறிவித்தது. இதனை பெற மக்கள் முந்திக்கொண்டு வந்ததால் நேற்று திங்கட்கிழமை அந்த இடமே கலவரமானது. இந்த இலவச டிக்கெட் விற்பனை காலை காலை 10 மணிக்கு தொடங்கும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் பிடிக்காத வேலை… Resign செய்ய முடியுமா? முதலாளிகள் முரண்டுபிடித்தால் என்ன நடக்கும்… Complete Report

ஆனால் இதை வாங்க கூட்டம் காலை 7 மணியில் இருந்தே அலைமோதியதாக கூறப்படுகிறது. விற்பனை தொடங்கிய 1.30 மணி நேரத்திற்குள் மொத்த டிக்கெட் விற்பனையும் விற்று தீர்ந்தது. இதை தொடர்ந்து இன்று மார்ச் 28ந் தேதி 350 கப்புள் டிக்கெட்டுகளும் உடனே விற்று தீர்ந்தது. இந்த டிக்கெட்டுகள் வாங்கிய தினத்தில் நண்பகல் 11 மணி முதல் இரவு 8.30க்குள் பயன்படுத்திட வேண்டும்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் செல்ல நினைக்கும் ஊழியரா நீங்க… அப்போ இந்த தகவலை மிஸ் செய்யாமல் தெரிஞ்சிக்கோங்க.. வாழ்க்கையே செம எளிதாக்கிடும்!

நாளை கொடுக்கப்பட இருக்கும் 150 கப்புள் டிக்கெட்கள் நண்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை திரையிடப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று நாட்களில் கடந்த வருடம் வெளியாகி ஹிட் அடித்த Thor: Love And Thunder, புல்லட் ட்ரையின், எல்விஸ் அண்ட் டிக்கெட் டூ பரடைஸ் போன்ற ஹாலிவுட் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts