TamilSaaga

ஒத்தை ஆளாக.. அவ்வளவு துணிச்சலுடன் கழிவு நீரை குடித்த சிங்கப்பூர் பிரதமர்.. ஆட்டம் காட்டிய எதிரிக்கு ஒரேயொரு Bottle-ல் “ஆப்பு” வைத்த சம்பவம்!

இந்தியாவில் நடைபெற்ற சம்பவம் ஒன்று தற்போது சிங்கப்பூரின் பழைய வரலாறுகளை மீண்டும் ஒரு முறை உலகறிய தெரியப்படுத்தியுள்ளது.

ஆம்! இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சுல்தான்புர் லோதியில் ஓடும் காலி பெயின் நதி சீக்கியர்களின் புனித நதியாக கருதப்படுகிறது. சீக்கிய மத குருக்களின் முதன்மையானவரான குருநானக் கிபி.15-16ம் நூற்றாண்டில் இந்த நதியில் நீராடியதாகவும், நதிக்கரையில் தங்கி இருந்ததாகவும் நம்பப்படுகிறது. ஆனால் தற்போது இந்த நதி கடுமையாக மாசடைந்துள்ளது. எனவே இதனை தூய்மைப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 22வது ஆண்டாக நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொண்டார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முதல்வரான பகவந்த், அந்த நதியில் பயணித்து அதிலிருந்து ஒரு டம்ளர் நீரை பருகியுள்ளார். பிறகு நிகழ்ச்சி முடிந்ததும், டெல்லி சென்ற பகவந்த் மானுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாசடைந்த காலி பெயின் நதி நீரை குடித்ததால் தான் உடல் நலம் பாதித்ததாக பலரும் விமர்சித்தனர்.

இந்த சூழலில், ஸ்வீடன் நாட்டின் உப்சாலா பல்கலைக்கழக பேராசிரியர் அசோக் ஸ்வைன், இந்த சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட் விவாதப் பொருளாகியுள்ளது. அவர் தனது ட்வீட்டில், “கடந்த 2002-ம் ஆண்டு அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டோங் பொதுவெளியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை குடித்து பொதுமக்களுக்கு நம்பிக்கையளித்தார்.

மேலும் படிக்க – “இனி Check-In Counter-ல் வைத்து பணம் வசூலிக்க முடியாது”.. இந்திய பயணிகளுக்கு பெரிய நிம்மதி – Ministry of Civil Aviation வெளியிட்ட சூப்பர் அப்டேட்

அது எவ்வளவு பாதுகாப்பானது என்பதையும் அவர் விவரித்தார். தண்ணீர் பங்கீடு தொடர்பாக அப்போது சிங்கப்பூர் – மலேசியா இடையே மோதல் நிலவிய காலக்கட்டம் அது. நான் சிங்கப்பூருக்கு ஆலோசனை சொன்னேன். சிங்கப்பூர் அறிவியல் பாதையில் சென்றது. ஆனால் பஞ்சாப் முதலமைச்சர் நம்பிக்கையின் பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

அசோக் ஸ்வைன் சொன்னது முற்றிலும் நூறு சதவிகிதம் உண்மை தான். 2002ம் ஆண்டு தண்ணீர் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, சிங்கப்பூர் கழிவு நீரை சுத்த நீராக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டது. அப்படி சுத்திகரிக்கப்பட்ட ஒரு பாட்டில் கழிவு நீரைத் தான் அன்று சிங்கை பிரதமராக இருந்த கோ சோக் டோங் பொதுவெளியில் மக்கள் முன்பு குடித்தார்.

அப்போது அவர் முழங்கிய வார்த்தை ஒன்று மிகப் பிரபலமாக இருந்தது. ஆம்…

“We now have our own water” என்று அவர் சொன்ன அந்த வார்த்தை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சிங்கப்பூரும் தனது நீர் ஆதாரத்தை உறுதி செய்து கொண்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts