TamilSaaga
EntrePass

சிங்கப்பூரில் தொழில் துவங்க தேவைப்படும் EntrePass – என்ன வகை பாஸ் அது? முழு விவரம்!

சிங்கப்பூர் வந்து பணிபுரிய எக்கச்சக்க வழிகள் இருக்கிறது. அதற்கென்றே பிரத்தியேகமாக பல பாஸ்களும் இங்குண்டு. ஆனால் ஒரு வெளிநாட்டவர், சிங்கப்பூர் வந்து தொழில் துவங்க முடியுமா? அதற்கான வழிகள் உள்ளதா? என்றால் நிச்சயம் உண்டு என்பதே பதில்.

சிங்கப்பூரில் தொழில் துவக்க என்ன செய்யணும்?

உரிய தகுதியுள்ள வெளிநாட்டு தொழில்முனைவோர் சிங்கப்பூரில், ஆதரவு பெற்ற அல்லது புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒரு தொழிலைத் தொடங்கவும், அதை இங்கு இயக்கவும் EntrePass அனுமதிக்கிறது.

என்னென்ன வணிகங்கள் துவங்கலாம்?

சிங்கப்பூரில் வெளிநாட்டவர் வந்து துவங்க எந்தெந்த வணிகங்கள் தகுதியானவை, எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் பாஸைப் புதுப்பிப்பதற்கான வழிகள் ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

எந்தெந்த வணிகங்கள் துவங்க அனுமதி இல்லை?

Coffee shops, hawker centres, food courts
Bars, night clubs, karaoke lounges
Foot reflexology, massage parlours
Acupuncture, traditional Chinese medicine, herbal dispensing businesses
Employment agencies
Geomancy business போன்ற வணிகங்கள் துவக்க அனுமதி இல்லை.

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

சுய விவரம் அடங்கிய பாஸ்ப்போர்ட்டின் பக்கம்.
உங்கள் வணிக திட்டத்தை 10 பக்கங்கள் அல்லது அதற்கும் குறைவான பக்கங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் ஏற்கனவே செய்த வணிக முயற்சிகளுக்கான வணிக வகை மற்றும் செயல்பாடுகளைக் குறிப்பிடுவதற்கான ஆவணம்.
நிறுவனத்தின் சமீபத்திய நிதிநிலை அறிக்கை (நிறுவனம் ACRA-வில் 12 மாதங்களுக்கும் மேலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டும்)

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு – இரு இந்திய பெண்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

தொழில் துவங்க நினைப்பவர் நேரடியாக இந்த வகை பாஸிற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு 105 சிங்கப்பூர் டாலர் வசூலிக்கப்படும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பின் அதிகபட்சம் 8 வாரங்களில் உங்கள் EntrePassக்கான பணிகள் நடந்து முடியும். சிங்கப்பூரில் தொழில் துவங்கி, குறிப்பிட்ட சில விஷயங்களை பூர்த்தி செய்யும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கை துணை, குழந்தைகள் அல்லது பெற்றோரை சிங்கப்பூரை அழைத்து வர வாய்ப்பு கிடைக்கும்.

Related posts