TamilSaaga

“விதி வலியது” ஊழியர்கள் பணியிடத்தில் பாதுகாப்பாக இருந்த போதிலும் நேர்ந்த சம்பவம்… மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!

சிங்கப்பூரில் கட்டுமானத்துறையை பொருத்தவரை முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததன் காரணமாக பல உயிர்கள் இறப்பதை நாம் செய்திகளாக படித்துக் கொண்டுதான் வருகின்றோம். கடந்த இரு நாட்களுக்கு முன்பு கூட தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரான ஏழுமலை பணியிடத்தில் மரணமடைந்த செய்தியை நாம் வெளியிட்டு இருந்தோம்.

அவரது மறைவில் இருந்து மீள முடியாமல் குடும்ப உறுப்பினர்கள் தற்பொழுதும் வருத்தத்தை தெரிவிக்கும் செய்தி அனைவரின் மனதையும் கனமாக்கியது. இந்நிலையில் சிங்கப்பூரில் கட்டுமான துறையில் எதிர்பாராத விதமாக டிசம்பர் 28ஆம் தேதி மற்றும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. சிங்கப்பூரில் மவுண்ட் வெர்னன் சாலையில் கட்டுமான பணி ஒன்று நடைபெற்று வருகின்றது. கட்டுமான பணி நடைபெறும் பொழுது மழை அதிகமாக பெய்த காரணத்தினால் பணி செய்யும் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பின் காரணமாக பணிகளை நிறுத்தி நகரத் தொடங்கினர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு அருகே மின்னல் தாக்கியதில் மூன்று ஊழியர்கள் காயமடைந்தனர். மூவரும் மின்னல் தாக்கிய சில நொடியில் மயக்கம் வருவதாக கூறியதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுவரை சிகிச்சை பெற்று வரும் அவர்களின் உடல்நிலை படிப்படியாக தேடி வருவதாக மருத்துவர்கள் நம்பிக்கை வார்த்தை கூறியுள்ளனர். என்னதான் பணியிடத்தில் கவனமாக இருந்தாலும் இது இதேபோன்று எதிர்பாராத விபத்துக்கள் நடைபெற தான் செய்கின்றன.

Related posts