சிங்கப்பூர் கிளமெண்ட் சாலையில் அமைந்துள்ள ஹோலி சர்ச் 14 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஜீலை.31) மதியம் 1 மணி முதல் ஆகஸ்ட் 14 மதியம் 1 மணி வரை மூட்டப்படுகிறது எனவும் தீவிரமாக தூய்மைபடுத்தும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த சர்ச் பாதரியார் Henry Seiw அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் ஜீலை 25ஆம் தேதியன்று 7.30 மணிக்கு நடைபெற்ற தேவாலய கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.
அதில் ஒரு நபராக்கு ஜீலை.26ல் கோரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அவர் முழுவதுமாக தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்.
இரண்டாவது நபரான பெண்மணி முதலாவதாக பாதிக்கப்பட்ட நபருடன் ஒரே இடத்தில் தேவலாய கூட்டத்தில் அமர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டாவதாக பாதிக்கப்பட்டவர் வீட்டுத் தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கிளமெண்டி சாலையில் உள்ள சர்ச் 14 நாட்கள் மூடப்பட்டு தூய்மை பணிகள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை சர்ச் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.