TamilSaaga
blood moon

சிங்கை வானை சிவப்பாக மாற்றப்போகும் Blood Moon – எப்போது பார்க்கலாம்?

சிங்கப்பூரை பொறுத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக வானில் சந்திர கிரகணம் தோன்றவுள்ளது. பிரபஞ்சத்தை விரும்பி பார்க்கும் பலருக்கும் ஒரு விருந்தாக அமையவுள்ளது இந்த சந்திர கிரகணம். வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சந்திர கிரகணத்தின் போது நிலவு மிகுந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். ஆகவே தான் இதை “இரத்த நிலவு” அதாவது Blood Moon என்று அழைக்கிறார்கள்.

நமது சிங்கப்பூரை பொறுத்தவரை மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இந்த முழு சந்திர கிரகணங்கள் தெரியும் என்று அறிவியல் மைய சிங்கப்பூர் ஆய்வகம் பதிலளித்தது. சிங்கப்பூரில் கடைசியாகத் தெரிந்த முழு சந்திர கிரகணம் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நடைபெட்றது. அதே நேரம் இந்த 2025ம் ஆண்டுக்குப் பிறகு, அடுத்தது மார்ச் 3, 2026ல் அடுத்த சந்திர கிரகணம் தொன்று,.

ஆனால் 2022ம் ஆண்டு தோன்றிய அந்த கிரகணத்தைப் போலவே, 2026ம் ஆண்டு தோன்றும் கிரகணத்தையும் பார்ப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். உலகளாவிய வானியல் வலைத்தளமான timeanddate.com இன் சமீபத்திய தரவுகளின்படி, செப்டம்பர் 7ம் தேதி வரும் சந்திர கிரகணம் சிங்கப்பூரில் இரவு 11.28 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 8ம் தேதி அதிகாலை 2.11 மணிக்கு உச்சத்தை அடைந்து, அதிகாலை 4.55 மணிக்கு முடிவடையும் என்று கணக்கிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் இணையதளத்தில் காணப்படும் தகவல்களின்படி, முழு சந்திர கிரகணத்தின் போது – பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக நகரும் போது – சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனை நோக்கி வளைந்திருக்கும். அப்போது வளிமண்டலம் நீலம் மற்றும் பச்சை போன்ற குறுகிய அலைநீள ஒளியைச் சிதறடிக்கும். ஆனால் சிவப்பு மற்றும் ஆரஞ்சு போன்ற நீண்ட அலைநீள ஒளியை மட்டும் கடந்து செல்ல அனுமதிப்பதால் நமக்கு இந்த Blood Moon தென்படுகிறது.

சிங்கப்பூரில் Recruitment Roadshow நடத்தும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் – எங்கே? எப்போது நடைபெறுகிறது?

ஆனால் இந்த சிவப்பு நிறத்தின் அடர்த்தியானது வளிமண்டலத்தில் உள்ள தூசி அல்லது மாசுபாடு போன்ற காரணங்களை பொறுத்து மாறுபடும். அதே நேரம் அனைத்து முழு சந்திர கிரகணங்களும் முழுமையான “இரத்த நிலவை” ஏற்படுத்துவதில்லை என்பதையும் நான் தெரிந்துகொள்ளவேண்டும். ஆகவே சிங்கப்பூரில் Blood Moon எப்படி தெரியப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Related posts