உலக அளவில் பல சிறப்புமிக்க செயல்களுக்கு பெயர் பெற்றது நமது சிங்கப்பூர், குறிப்பாக மருத்துவ ரீதியான பல சிகிச்சைகளுக்கு நமது சிங்கப்பூர் ஒரு கலங்கரை விளக்கமாகவே திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அந்த நிலைப்பாட்டின் புதிய அலங்காரமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முதன்முதலாக கணைய மாற்று அறுவை சிகிச்சை வழங்கவிருக்கும் முதல் நாடும், ஒரே நாடும் சிங்கப்பூர் என்ற பெருமையை பெற்றுள்ளது பெருமையளிக்கும் விஷயமாக உள்ளது.
இதையும் படியுங்கள் : தொற்றிலும் தொடர்ந்த சேவை
கணைய மாற்று அறுவை சிகிச்சையை அங்கீகரிப்பதாக தற்பொழுது சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆகையால் இது தேசிய செயல்திட்டமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் கணைய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள விருப்பப்படும் மக்கள் தேசிய காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தேசிய செயல் திட்டத்தின் கீழ் வரும் அனைவருக்கும் அதாவது சிங்கப்பூரர்களும், நிறைந்த வாசிகளுக்கும் இந்த சிகிச்சையில் மானியங்களும் உண்டு என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. நமது உடலில் கணையம் தான் இன்சுலினை சுரக்கும் ஒரு அதி சிறந்த கருவியாக செயல்பட்டு வருகிறது. நமது உடலில் சேரும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இந்த இன்சுலின் பயன்படுகிறது. ஆனால் நமது கணையம் பாதிக்கப்பட்டால் நாளடைவில் இந்த இன்சுலின் சுரப்பது நின்று சர்க்கரையின் அளவு கூடி அது மிகப்பெரிய அபாயங்களை உருவாக்கக்கூடும்.
இதனால் செயற்கையாக இன்சுலின்களை செலுத்தி கொள்வது தற்காலிகமான தீர்வாக இருந்தாலுமே கூட கணையங்கள் செய்யும் அந்த செயலை அந்த இன்சுலின்களால் செய்ய முடியாது. ஆகவே இப்பொழுது நமது சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த கணைய மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.