இந்த ஆண்டு சிங்கப்பூரில் விமான சாகச நிகழ்ச்சி வெகு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளில் இருந்து பல விமான குழு பங்கேற்க உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு தான் சிங்கப்பூரில் முதல் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் பொது பார்வையாளர்கள் கொரோனா காரணமாக பங்கேற்க முடியவில்லை. இந்த ஆண்டு அதை சமன் செய்யும் வகையில் பொது மக்களுக்கும் மற்றும் வர்த்தக பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 20 – 25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் ஆறு குழுக்கள் பங்கேற்க உள்ளன. அதில் 5 குழுக்கள் மற்ற நாட்டிலிருந்து இங்கு வந்து பங்கு பெறுகின்றன. அதனால் இந்த ஆண்டு நடக்கும் சாகச நிகழ்ச்சியில் நிறைய சுவாரசியமான விஷயங்களை அனுபவிக்கலாம். சிங்கப்பூர் வாழும் மக்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு குறிப்பாக விமான சாகசத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
இந்த சாகச நிகழ்ச்சி Changi Exhibition Centre -ல் நடைபெற உள்ளது. இந்த சாகச நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தவிருக்கிறது Experia.
இந்த ஆண்டு சீனாவின் சார்பாக சீனாவின் Comac நிறுவனம் அதனுடைய முதல் C919 விமானம் மற்றும் Airbus A350-1000 ம் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சார்பாக இந்திய விமானப்படையில் சாரங் குழு அதனுடைய மேம்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் புதிய சாகசங்களை அரங்கேற்ற உள்ளது.
அது மட்டும் இன்றி ஆஸ்திரேலியாவில் இருந்து Royal Australian Air Force’s Roulettes இந்தோனேசியவிமானப்படையில் இருந்து Air Force’s Jupiter, கொரிய விமானப்படையில் இருந்து Republic of Korea Air Force’s Black Eagles மற்றும் அமெரிக்க விமானப்படையில் இருந்து B-52 Stratofortress பங்கேற்க உள்ளது.
நமது சிங்கப்பூர் விமானப்படையின்F-15SG பைட்டர் ஜெட் மற்றும் AH-64D Apache attack ஹெலிகாப்டரும் பங்கேற்க உள்ளன.
இந்த சாகச நிகழ்ச்சி குறித்து Experia மேலாளர் Leck Chet Lam கூறியதாவது,
இந்த விமான சாகசங்கள் முதல் நான்கு நாட்கள் ஆசியாவின் வர்த்தக பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்கள் பொது பார்வையாளர்கள் அல்லது உள்ளூர் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பிப்ரவரி 20 முதல் 22 வரை நடக்கவிருக்கும் இந்த நிகழ்வு முதல் நாள் 12.30pm அடுத்த நாள் 11.30am மணிக்கு தொடங்கும்
பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதி பொது பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது, அந்த இரண்டு நாட்கள், இரண்டு முறை இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது காலை 11:30 மணி மற்றும் மாலை 2.30 மணிக்கு நடைபெறும்.
நிகழ்ச்சியின் நேரங்கள் மாற்றி அமைக்கப்படலாம் மேலும் விவரங்களுக்கு Singapore Airshow எனும் இணையதளத்தை சரி பார்த்துக் கொள்ளவும். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டின் விலை,
பெரியவர்களுக்கு – $34z
குழந்தைகளுக்கு – $17 ( 3 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள்)
குரூப் பேக்கேஜ் – $240 ( நான்கு டிக்கெட்டுகள் மற்றும் கார் பார்க்கிங் உட்பட)
இந்த நிகழ்ச்சியை காண பல்வேறு நாடுகளில் இருந்து உயர்மட்ட அரசு மற்றும் இராணுவ பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதில் உலக பிரசித்தி பெற்ற வர்த்தக நிறுவனமான Boeing மற்றும் Embraer கலந்து கொள்கின்றன. அதேபோல் பாதுகாப்பு துறையில் ஜாம்பவான்கள் ஆன Bird Aerosystems மற்றும் Israel Aerospace Industries கலந்து கொள்கின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியை அனைவரும் கண்டு களிக்க வேண்டும்