TamilSaaga

அதிகாலை 2.40 மணிக்கு வந்த ஃபோன் கால்… சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கேட்ட “அலறல்” சத்தம் – உடனே சீறிப் பாய்ந்த சிங்கை போர் ஜெட் விமானங்கள் – என்ன நடந்தது?

SINGAPORE: அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிங்கப்பூரை நோக்கி SQ33 விமானம் ஒன்று இன்று (செப்.28) வந்து கொண்டிருந்தது.

இந்த சூழலில், திடீரென சிங்கப்பூர் விமான நிலைய அதிகாரிகளுக்கு, அந்த விமானத்தில் இருந்து வந்த தகவல் பெரும் பீதியை ஏற்படுத்தியது. அதாவது, இன்று அதிகாலை சரியாக 2.40 மணியளவில், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வர, சிங்கை அதிகாரிகள் ஆடிப்போனார்கள்.

இதையடுத்து, உடனடியாக, Singapore Air Force-க்கு சொந்தமான F-16C/D வகை போர் ஜெட் விமானங்கள், அமெரிக்காவில் இருந்து வந்து கொண்டிருந்த விமானத்தை நோக்கி சீறிப் பாய்ந்தன.

இதற்கிடையில், விமானத்தில் என்ன நடந்தது என்பதை விமானிகள் மூலம் அதிகாரிகள் விசாரித்தனர். அதில், 37 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், தான் கொண்டு வந்திருந்த பையில் வெடிகுண்டு இருப்பதாக சொல்லி, கேபினில் இருந்த பணிப்பெண்களை தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து, பயணிகள் பயத்தில் கூச்சலிட, விமானிகள் உடனடியாக விமான கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் சிக்கிய 13 கிலோ போதைப்பொருள்.. தீ அணைக்கும் கருவியில் கஞ்சா கடத்திய “Brilliant” டீம் – கொத்தாக சிக்கிய 5 பேர் – தூக்கு உறுதி!

இதைத் தொடர்ந்து, அந்த விமானம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில், அதிகாலை 5.50 மணிக்கு, F-16C/D வகை போர் ஜெட் விமானங்கள் அணிவகுக்க பாதுகாப்போடு தரையிறங்கியது.

உடனடியாக விரைந்து வந்த போலீசார், அந்த பயணியை கைது செய்தனர். விமான நிலையக் காவல் பிரிவின் பணியாளர்கள் மற்றும் ராணுவத்தின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் வெடிபொருள் பாதுகாப்புக் குழு ஆகியவை அந்த விமானத்தை சுத்தமாக அலசி ஆராய்ந்ததில், வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் (MINDEF) இன்று (செப்.28) தங்களது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்றும் MINDEF தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு அனைத்து பாதிக்கப்பட்ட பயணிகளிடமும் மன்னிப்பு கேட்டுள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts