நமது Tamil Saaga சிங்கப்பூரில் பக்கத்தில் தினமும் சிங்கப்பூர் குறித்தும் சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் பிறநாட்டு தொழிலாளர்களின் நலம் குறித்தும் பல பதிவுகளை பார்த்து வருகின்றோம். இந்நிலையில் இன்று இந்த பதிவில் சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து மாதச் சீட்டு நடைமுறையில் ஈடுபடுவதில் உள்ள நன்மை தீமைகளை விவரிக்கின்றது.
மாத சீட்டு நடைமுறை என்பது சிறிய அளவு முதல் பெரிய அளவு உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகின்ற ஒன்று என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் சிங்கப்பூரிலும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு என்று இதுபோன்ற மாத சீட்டு முறை நடைமுறையில் உள்ளது. தற்போது இந்த சீட்டு முறை என்பது இரண்டு வடிவங்களில் உள்ளது. ஒன்று ஏல சீட்டு முறை மற்றொன்று குலுக்கல் சீட்டு முறை. இந்த ஏல சீட்டு முறையில் அதிக தொகை கேட்பவர்களுக்கு இந்த ஏலம் வழங்கப்படும். குலுக்கு சீட்டு முறையில் மாதாமாதம் வாங்கும் வட்டியின் விகிதம் என்பது மாறாமல் நிலையாக இருக்கும்.
இந்நிலையில் இந்த சீட்டு முறையில் உள்ள சாதக பாதகங்களை முறையாக அறிந்து சீட்டுகளில் சேர்கின்றன பணியாளர்கள் செயல்பட வேண்டும். வெளிநாட்டில் தொழில் செய்யும் ஒரு தனிமனிதனால் மிகப்பெரிய தொகையை சேமிப்பது என்பது மிகக்கடினம். அப்படி பெரிய அளவில் பணத்தை சேமிக்க முடியாதவர்கள் இதுபோன்ற சீட்டு சேமிப்பில் ஈடுபட்டால் நம்மை பயக்கும். நாளடைவில் இது ஒரு நல்ல பழக்கமாகவே மாறும் என்பது குறிப்பித்தக்கது.
இந்த ஏல சீட்டு முறையில், முதல் நான்கு, ஐந்து மாதங்களில் பலரும் சீட்டுகளை எடுப்பார்கள். ஆனால் சிலர் இறுதி வரை காத்திருந்து சீட்டை எடுக்கும் நிலையில் அவ்வாறு எடுப்பவர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் மாதம் நகரநகர குழுவில் உள்ள சிலரால் பணத்தை சரியாக செலுத்த முடியாமல் போகும். அது குழுவில் உள்ள மற்றவர்களும் பணத்தை கட்ட யோசிப்பார்கள். ஆகவே அந்த குழுவில் உள்ள அனைவரும் சிறந்த முறையில் செயல்பட்டால் மட்டுமே யாருக்கும் பாதகமில்லாமல் நகர முடியும்.
ஆனால் சிங்கப்பூரை பொறுத்தவரை அரசு இது போன்ற சீட்டு மற்றும் ஏலங்களை நடத்துவதில்லை. மாறாக மக்கள் தங்களுக்குள்ளாக உள்ள புரிதலில் மட்டுமே நடத்துகின்றனர். இந்த குலுக்கல் சீட்டு மற்றும் ஏல சீட்டு முறையில் முதலில் தொகையை பெறுபவர்கள் அதிக வட்டி செலுத்தவேண்டியிருக்கும். அதேபோல கடைசியில் பணம் எடுப்பவர்கள் குறைந்த அளவில் வட்டி செலுத்துவார்கள். ஆகவே ஒரு குழுவாக இணைந்து சீட்டு முறையை ஆரம்பவிப்பவர்கள் நல்ல புரிதலோடு செயல்பட்டால் நிச்சயம் நல்ல நன்மைகளை பயக்கும்.