TamilSaaga

சிங்கப்பூரின் டாப் 6 countdown பார்ட்டிஸ்… 2023ஐ மஜாவா தொடங்குங்க… டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

சிங்கப்பூரில் இருக்கும் நீங்க உங்க குடும்பத்துடன், நண்பர்களுடன் நியூ இயரை கொண்டாட எங்கு செல்ல வேண்டும் என்று குழப்பம் இருக்கா? 2023ம் ஆண்டினை தொடங்க countdown பார்ட்டிஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கான டாப் 6 பார்ட்டி குறித்த ஒரு பட்டியல் தான் இது. படிங்க, கலந்துக்கிட்டு மஜாவா புத்தாண்ட தொடங்குங்க.

*Star island

தென்கிழக்கு ஆசியாவில் 80 நிமிட வானவேடிக்கை நடத்தப்படும். இதுவரை கண்டிராத ஜப்பானிய வானவேடிக்கைகளைக் வெகு விமரிசையாக அமைந்து இருக்கும். “Graduation Shell” பட்டாசுகளும் அடங்கும். சிங்கப்பூரைக் கருத்தில் கொண்டு சிவப்பு-வெள்ளை காட்சியுடன் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20 Raffles Ave, சிங்கப்பூர் 039805ல் நடக்கும் இந்நிகழ்வு மாலை 5 மணியில் இருந்து தொடங்கும். இதற்கான டிக்கெட் விலை $88 முதல் $218 சிங்கப்பூர் டாலராக இருக்கும்.

*Ce La Vi

Ce La Viஇன் புத்தாண்டினை rooftop பாரில் கொண்டாடலாம். சிங்கப்பூரின் கட்டமைப்பு மற்றும் கண்கவரும் பட்டாசு 57 மாடிகள் உயரத்தில் இருந்து காண முடியும். Marina Bay Sands SkyPark Observation Deck (ஸ்கைபார்க் நுழைவு அருகில் உள்ள ஹோட்டல் லாபி டவர் 3). இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடக்கும். இதன் டிக்கெட் விலை $98 சிங்கப்பூர் டாலர் வரை இருக்கிறது.

*C Side NYE Countdown Beach Party

அருமையான இரவு நேர வாழ்க்கையினை அனுபவிக்க விரும்பினால் சிலோசோ பீச்சில் நடக்கும் C Side NYE Countdown Beach Partyல் கலந்து கொள்ளுங்கள். புக்கிங்கிற்காக reservations@cside.sg என்ற ஐடிக்கு இமெயில் பண்ணுங்க. 51, Imbiah Walk, 099538 என்ற முகவரியில் நடக்கும் இந்நிகழ்வு மாலை 5 மணியில் இருந்து தொடங்கும். $18 சிங்கப்பூர் டாலர் வரை டிக்கெட் இருக்கிறது.

*Mediacorp Let’s Celebrate 2023

Shila Amzah, Richie Koh, Yung Raja, ALYPH, Ebi Shankara, Glenn Yong, Desmond Ng மற்றும் Rahimah Rahim கலந்து கொண்டு பெர்ஃபாம் செய்யும் இந்த நிகழ்வு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை பெற்று வருகிறது. 7 மணியில் இருந்து தொடங்கு இந்நிகழ்வு 11 Marina Blvd, Singapore 018940ன் முகவரியில் நடக்கிறது. இதற்கு நுழைவு கட்டணம் இல்லை.

*Bollywood Countdown

Sentosaல் இருக்கும் Amara Sanctuary Resortல் பிரம்மாண்ட பால்ரூமில் இந்த நிகழ்வு நடத்தப்பட இருக்கிறது. நார்த் இந்தியன் உணவுகள் நிரம்பிய buffetம் இருக்கிறது. டிக்கெட் விலை $50ல் இருந்து $300 சிங்கப்பூர் டாலர் வரை இருக்கும். சிங்கப்பூர் டாலரில் இருந்து தொடங்கும். Sentosa Island, 1 Larkhill Rd, 099394ன் முகவரியில் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 2 மணி வரை நடத்தப்படும்.

*Skechers Sundown Live Countdown Party

Sentosaல் உள்ள Palawan Green ட்ரிப் செய்து, இந்தப் புத்தாண்டு தினத்தன்று Skechers Sundown பார்ட்டியில் மஜா பண்ணுங்க. தென் கொரியாவைச் சேர்ந்த DJ Soda, DJ Pin மற்றும் DJ Inquisitive ஆகியோர் பெர்பாம் செய்ய இருக்கிறார்கள். Palawan Green, Siloso Beach Walk, Sentosa, Singapore 098996 என்ற முகவரியில் நடக்கும் இந்நிகழ்வு இரவு 4 மணியில் இருந்து இரவு 1 மணி வரை நடக்கும். டிக்கெட் விலை $10 முதல் $168 சிங்கப்பூர் டாலர் வரை இருக்கும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts