TamilSaaga

“விமான எஞ்சின்களை பராமரிக்க சிங்கப்பூரில் புதிய நிறுவனம்” : $9 மில்லியன் செலவில் அசத்தும் SIA Engineering – “வேலைவாய்ப்பு” தான் இதில் Highlight

சிங்கப்பூர் SIA இன்ஜினியரிங் நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) பிரெஞ்சு நிறுவனமான சஃப்ரானின் விமான இயந்திரங்களுக்கு அடிப்படை பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக சாங்கி நார்த் பகுதியில் $9 மில்லியன் செலவில் புதிய நிறுவனத்தை திறந்துவைத்துள்ளது. 1,945 சதுர மீட்டர் பரப்பளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 CFM லீப்-1ஏ மற்றும் லீப்-1பி என்ஜின்களை தயாரிக்கும் திறன்கொண்டதாக இருக்கும்.

நடந்து சென்ற சிறுமி : கூட வரவா? என்று கேட்டு பாலியல் சீண்டல் செய்த “வெளிநாட்டு நபர்” – சிங்கப்பூர் நீதிமன்றம் தந்த தண்டனை இதுதான்

Airbus A320neo மற்றும் Boeing 737 MAX உள்ளிட்ட குறுகிய உடல் கொண்ட விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும், அடுத்த தலைமுறை CFM லீப் என்ஜின்களுக்கான வளர்ந்து வரும் தேவையை இது பூர்த்திசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, இவற்றில் 3,971 இன்ஜின்கள் சேவையில் உள்ளன, அதே நேரத்தில் சுமார் 19,000 க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் உள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த புதிய நிறுவனத்தின் மூலம் சிங்கப்பூர் அதன் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைக்கும் திறன்கொண்ட மையங்களை மேம்படுத்துகிறது என்றே கூறலாம். மேலும் SIA இன்ஜினியரிங் தலைமை நிர்வாக அதிகாரி திரு Ng Chin Hwee, நிறுவனம் தனது சேவைகளை மேலும் பல இயந்திரங்களுக்கு விரிவுபடுத்த விரும்புகிறது என்று கூறினார். சிங்கப்பூர் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளித் தொழில்களை மீட்டெடுப்பதில் எங்கள் நம்பிக்கை வளர்ந்துகொண்டே வருகின்றது என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூர்.. Work Permit உள்பட எல்லாத்தையும் தொலைச்சுட்டேன் : விரக்தியில் வெளிநாட்டு ஊழியர் – ஆனால் இறுதியில் நடந்த Magic

“இந்த அடுத்த தலைமுறை என்ஜின்களுக்கு மேம்பட்ட என்ஜின் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக, இப்பகுதியில் உள்ள முதல் எஞ்சின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைக்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்த நிறுவனம் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டில் தொற்றுநோய்க்கு முன்பே திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சுமார் 3 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் இது திறக்கப்பட்டுள்ளது. SIA இன்ஜினியரிங் இன்ஜின் சேவைகளின் மூத்த துணைத் தலைவர் திரு Stefan Schmuck பேசும்போது, இந்த நிறுவனம் முழுமையாக செயல்படும்போது சுமார் 80க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts