சிங்கப்பூர் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல சிறு குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அவர்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், வாடகை செலவுகள் போன்ற பல செலவுகளுக்கு பணமின்றி கடின சூழலை சந்தித்துள்ளன.
தற்காலிக குறுகிய கால கடன் திட்டமானது அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றக் கூடிய முக்கிய அம்சமாக உள்ளது. எனவே இந்த கடன் திட்டத்தை மேலும் நீட்டிக்க அரசு அறிவித்துள்ளது.
அடுத்த 6 மாதங்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்படுவதாகவும், வங்கிகள் வணிக நிறுவனங்கள் கடன் வழங்க ஏதுவாக சிங்கப்பூர் வெள்ளி திட்டம் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த கடன் உதவியானது கடின காலத்தில் உதவுவதற்காக வழங்கப்படுகிறது. பிற காலங்களில் இது வழங்கப்படாது என்றும் அதற்கு பதிலாக உற்பத்தி, ஆற்றலை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
நெருக்கடியான காலத்தில் நிறுவனங்களுக்கு உதவ இந்த திட்டங்கள் நிறுவப்படுகின்றன என
நிதியமைச்சர் லாரன்ஸ் ஓங் தெரிவித்தார்.