TamilSaaga

“வழிகாட்டுதல் இன்றி வெளியில் சென்று வரலாம்” : புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் MOM தகவல்

சிங்கப்பூரில் வரும் கடந்த டிசம்பர் 3 2021 முதல், தங்குமிடங்களில் வசிக்கும் அதிக அளவிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஓய்வு நாட்களில் வெளியில் சென்றுவர முடியும். புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்குமிடங்கள் இப்போது அதிக பெருந்தொற்று எதிர்ப்புத் திறன் கொண்டவையாக இருப்பதாலும். பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாலும் 3,000 தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இப்போது சமூகத்தின் எந்த இடத்திற்கும் “வழிகாட்டப்படாத” அடிப்படையில் செல்லலாம்.

இதையும் படியுங்கள் : சாங்கி விமான நிலையம் வந்திறங்கியவுடன் என்ன செய்யணும்?

எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பொறுமைக்கும் மற்றும் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நாங்கள் பெருந்தொற்று நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் எங்கள் திட்டங்களைத் காலத்திற்கு தகுந்தவாறு சரிசெய்வோம்.

பல மாதங்களாக புடுத்தலில் இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு “முன்னோடி திட்டம்” மூலம் பாதுகாப்பான முறையில் வெளியில் அழைத்து சென்றுவரப்பட்டனர். இந்நிலையில் வழிகாட்டுதலின்றி அவர்களே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts