Class 4 License: சிங்கப்பூரில் அதிக சம்பளம் கொடுக்கும் துறைகளில் ரொம்பவே பிரபலமாக இருப்பது என்னவோ டிரைவர் தொழில் தான். டிரைவராக வேலை பார்ப்பவர்களுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் இருக்கும். அதிலும் heavy வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு தான் அதிக வாய்ப்புகள். இதற்காக சிங்கப்பூரில் கொடுக்கப்பட்டு வருவது தான் Class 4 லைசன்ஸ். இதை எப்படி எடுப்பது? என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிங்கப்பூரில் Class 4 லைசன்ஸ் பெறுவதற்கான செலவு பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும். இதில் பயிற்சி பள்ளி, தேர்வு முயற்சிகள், மருத்துவ பரிசோதனை மற்றும் அரசாங்க கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.
சிங்கப்பூரில் Class 4 லைசன்ஸ் பெறுவதற்கான தகுதிகள் (வெளிநாட்டவர்கள்)
சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் Class 4 லைசன்ஸ் பெறுவதற்கு பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
- குடியிருப்பு நிலை: சிங்கப்பூரில் நீண்ட கால குடியிருப்பு நிலை இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, வேலை அனுமதி (Employment Pass), எஸ் பாஸ் (S Pass), அல்லது நிரந்தர குடியிருப்பு (Permanent Residency).
- ஒரிஜினல் பாஸ்போர்ட்
- வயது: குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும்.
- Class 3 லைசன்ஸ்: குறைந்தது 2 ஆண்டுகளாக செல்லுபடியாகும் Class 3 லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்.
- மருத்துவ தகுதி: கனரக வாகனங்களை ஓட்ட தகுதியானவர் என்பதை மருத்துவ பரிசோதனை மூலம் நிரூபிக்க வேண்டும்.
- ஓட்டுநர் அனுபவம்: குறிப்பிட்ட ஓட்டுநர் அனுபவம் தேவைப்படலாம்.
- போக்குவரத்து விதி மீறல்கள்: கடுமையான போக்குவரத்து விதி மீறல்கள் எதுவும் இல்லாமல் தூய்மையான ஓட்டுநர் பதிவு இருக்க வேண்டும்.
S-pass, E-pass, Work permit என எந்தவிதமான விசாவில் இருப்பவர்களும் Class 4 லைசன்ஸ் எடுக்கலாம். ஆனால் உங்களில் தொழில் குறித்த தகவலில் டிரைவர் என மட்டுமே இருக்க வேண்டும். அதில் Driver-cum-Worker என இருந்தால் எந்தவித பாஸ் வைத்திருப்பவர்களாலும் எடுக்கவே முடியாது.
Class 3 driving license இருந்தால் மட்டுமே Class 4 driving license எடுக்க முடியும். உங்க கம்பெனியில் Class 4 வண்டி இருக்க வேண்டும். Class 4 லைசன்ஸ் வுட்லாண்ட்டில் மட்டுமே எடுக்க முடியும். அதற்கு தனியாக அப்பாயின்மெண்ட் எதுவும் வாங்க தேவையில்லை. நேரடியாகவே செல்லலாம்.
சிங்கப்பூரின் முன்னணி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்க!
வெளிநாட்டு லைசன்ஸ் மாற்றம்: நீங்கள் செல்லுபடியாகும் வெளிநாட்டு Class 4 லைசன்ஸ் வைத்திருந்தால், அதை சிங்கப்பூர் Class 4 லைசன்ஸாக மாற்ற முடியும். மாற்றத்திற்கான குறிப்பிட்ட தேவைகள் உங்கள் நாட்டு மற்றும் உங்கள் வெளிநாட்டு லைசன்ஸ் வகையைப் பொறுத்து மாறுபடும்.
ஓட்டுநர் தேர்வுகள்: சிங்கப்பூரில் Class 4 லைசன்ஸ் பெற கோட்பாட்டு மற்றும் நடைமுறை ஓட்டுநர் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதற்கு கம்பெனியில் இருந்து லெட்டர் வாங்கி கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட தகவலுடன் டிரைவர் என்பதை மறக்காமல் அந்த லெட்டரில் குறிக்கப்பட வேண்டும். உங்க டிரைவிங் லைசன்ஸ், ஒரிஜினல் வொர்க் பெர்மிட், Mywork SG Passல் உங்க வொர்க் பெர்மிட் ஸ்கேன் செய்தால் தனிப்பட்ட தகவல்கள் வரும் அதையும் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.
இதை எடுத்துக்கொண்டு லெவல் 1க்கு போக வேண்டும். உங்க டாக்குமெண்ட் சரிபார்த்து உங்களுக்கு Class 4 லைசன்ஸ் எடுக்கலாம் என்றால் லெவல் 3க்கு உங்களை அனுப்புவார்கள். அங்கு உங்களுக்கு டோக்கன் போடப்பட்டு கட்டணத்தை செலுத்த சொல்வார்கள்.
நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனியில் கண்டிப்பாக heavy vehicle இருக்க வேண்டும். அதைப்போன்று பெர்மிட்டின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு மேல் இருக்க வேண்டும். சிங்கப்பூரில் இருக்கும் woodlands சென்டரில் மட்டுமே class 4 லைசன்ஸ் எடுக்க முடியும். இது மட்டுமே அரசு சார்ந்த நிறுவனம். ஆனால் தனியார் நிறுவனங்கள் நடத்தும் சென்டர்கள் மேலும் சில செயல்பட்டு வருகிறது. உங்க ஏரியாவிற்கு அருகில் விசாரித்தால் தெரியலாம்.
class 4 லைசன்ஸ் எடுக்க 1300 முதல் 1400 வரை சிங்கப்பூர் டாலர் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது உங்களின் கிளாஸ், தேர்வு, PDL, போக்குவரத்து செலவு என எல்லாமே அடங்கி விடும். மேலும் கண்டிப்பாக 8 கிளாஸில் கலந்து கொள்ள வேண்டியது ரொம்பவே முக்கியம். இதில் ஒன்றை கூட மிஸ் செய்ய கூடாது. அப்போது தான் உங்களால் தேர்வு எழுத முடியும். ஃபெயில் ஆனால் மீண்டும் 200 முதல் 500 சிங்கப்பூர் டாலர் வரை செலவுகள் இருக்கும். அதற்கும் 2 வகுப்புகள் தனியாக கலந்து கொள்ள வேண்டும்.
இதைத்தொடர்ந்து, சென்டரில் சென்று ஆவணங்களை கொடுத்து அட்மிஷன் போட்டால் தொடர்ந்து வகுப்புகள் புக் செய்யலாம். வகுப்பு முடிந்தவுடன் டெஸ்ட் எழுதி பாஸானால் class 4 லைசன்ஸ் கிடைத்து விடும். தேர்வு சாய்ஸ் டிக் செய்வது போல தான் இருக்கும். மேலும் கண்டிப்பாக கம்பெனியின் அனுமதியுடன் தான் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.