இந்திய அளவில் தமிழகத்தில் இருந்து ஆரம்பம் முதல் NON VTL சேவைகளை இயக்கி வந்த ஒரு சில விமான சேவை நிறுவனங்களில் Scoot விமான சேவை நிறுவனமும் ஒன்று. மக்களை தமிழகம் முதல் சிங்கப்பூர் கொண்டு சென்ற சிறந்த விமான நிறுவனமாகவும் Scoot செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று இரவு 11.50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு இன்று காலை 6 மணிக்கு சிங்கப்பூர் வந்து சேரவேண்டிய Scoot விமானம், முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் சுமார் 7 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. இரவு முழுவதும் Boarding முடித்து காத்திருந்த பயணிகள் இறுதியாக இன்று காலை 7 மணிக்கு சிங்கப்பூர் நோக்கி தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.
பொதுவாக விமான சேவைகள் பல மணி நேரம் தாமதமாகும் நிலையில் பயணிக்கவிருந்த பயணிகளுக்கு ஹோட்டல் அறைகள் அளிக்கப்படும். ஆனால் நேற்று நள்ளிரவு Scoot விமானம் புறப்பட தாமதமான நிலையில் ஹோட்டல்கள் ஏதும் அளிக்கப்படாமல் பயணிகள் விமான நிலையத்திலேயே இரவு முழுவதையும் கழிக்க நேரிட்டுள்ளது.
கைக்குழந்தைகளோடு வந்த பயணிகள் மற்றும் வயதான மக்கள் இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விமான சேவைகள் ரத்தாவது இயல்பான விஷயம் தான் என்றபோதும், ஆனால் அது போன்ற சந்தர்ப்பங்களில் பயணிகளுக்கும் உரிய வசதிகளை செய்துகொடுத்தால் சிரமம் இல்லாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Scoot விமானத்தின் இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்பதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091