TamilSaaga

Refund கிடையாது… பயண தேதியை மாற்ற Date Changing fees, Fare difference-னு 9,000 செலுத்தணும் – சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு!

SINGAPORE: Scoot விமானங்கள் Covid 19-க்கு முன்பாக, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தினம் இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. சிங்கப்பூரில் இருந்து இரவு 9.10 மணிக்கு எடுக்கப்படும் விமானம், திருச்சியில் இரவு 10.50 மணிக்கு வந்து சேரும். அதுபோல், இரவு 11 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து எடுக்கப்படும் இரண்டாவது விமானம், நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி வந்து சேரும்.

அதுபோல், திருச்சியில் இருந்து முதல் Return விமானம், இரவு 11.50 மணிக்கு முதல் விமானமும், நள்ளிரவு 1.30 மணிக்கு இரண்டாவது விமானமும் கிளம்பும். இதுதான் கொரோனாவுக்கு முந்தைய நடைமுறையாக இருந்தது.

இந்நிலையில், கொரோனாவுக்கு பிறகு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரேயொரு விமானம் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், தற்போது மீண்டும் அந்த இரண்டாவது விமானத்தின் போக்குவரத்தை ஸ்கூட் நிறுவனம் தொடங்குவதாக அறிவித்துள்ளது. நவம்பர்.1 தேதியில் இருந்து இயக்கப்பட உள்ள இந்த விமானத்திற்கான புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது.

ஸோ, இனிமேல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு, மீண்டும் பழைய நடைமுறைப்படி இரண்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று (ஆக.13) வெளியாகியுள்ளது.

NON REFUNDABLE TICKETS

இதில் மிக முக்கியமான தகவல் என்னவெனில், இந்த ஸ்கூட் விமானம் NON REFUNDABLE TICKETS-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் டிக்கெட் புக் செய்துவிட்டு, Cancel செய்தால் பணம் Refund ஆகாது. அதேசமயம் பயண தேதியை மாற்ற வேண்டுமெனில் அபராதம் விதிக்கப்படும். தேதியை மாற்றுவதற்கு ஒரு கட்டணம் மற்றும் Fare Difference தொகையையும் கட்ட வேண்டியிருக்கும்.

எடுத்துக்கட்டாக ஒருவர் 10,000 ரூபாய்க்கு டிக்கெட் புக்கிங் செய்த பிறகு, பயண தேதியை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், Changing fees 4,500 ரூபாய் மற்றும் Fare difference 5,000 ரூபாய் என்று கிட்டத்தட்ட 9,000 ரூபாய் அளவுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதுதான் ticket date changing fees-ன் விதிகள். இனி எனவே, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் மிக கவனமாக தேதியை சரிபார்த்து புக்கிங் செய்ய வேண்டும். இந்த கட்டணம் ஒருசில நாட்களில் கம்மியாகவும், ஒருசில நாட்களில் மிகவும் அதிகமாகவும் இருக்கும்.

நவம்பர் 1ம் தேதி முதல் இயங்கும் இந்த விமானத்துக்கான டிக்கெட் புக்கிங் தற்போது ஓப்பனாகியுள்ளது. எனவே பயணிகள் இப்போது முன்பதிவு செய்து கொள்ளலாம். கணக்குப்படி நவம்பர் 1 என்றாலும், அக்டோபர் 30 முதலே சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு இரண்டு விமான சேவை தொடங்குகிறது. அதேபோல், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு அக்.31 முதல் இரண்டு விமானங்களின் சேவை தொடங்குகிறது.

விமான டிக்கெட் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும்

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி
96002 23091

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts