TamilSaaga

‘பள்ளி, மாணவர்களுக்கு ஒரு வீடாக திகழ வேண்டும்’ – கல்வி அமைச்சர் சான் சுன் சிங்

சிங்கப்பூரில் பள்ளிச் சூழலின் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் உணர்வை இழக்காமல் பள்ளிகளில் பாதுகாப்புத் தேவைகள் சமப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிப்பதில், கல்வி அமைச்சகம் (MOE) மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பள்ளி அனுபவத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டார். பள்ளிகளில் பாதுகாப்பாக இருப்பதற்கான திறவுகோல் என்பது மிகவும் கடினமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் அல்ல, மாறாக அது மேம்பட்ட சமூக விழிப்புணர்வு என்பதில் உள்ளது என்று திரு சான் பாராளுமன்றத்தில் கூறினார். மேலும் ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி சம்பவத்திற்கு தனது இறங்கல்களையும் தெரிவித்தார்.

“எங்கள் பள்ளிகளை கோட்டைகளாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை, இது எங்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடையே அமைதியற்ற நிலையயும் மன அழுத்தத்தையும் உருவாக்கும்”. மாணவர்கள் அமைதியான சூழலில் கல்விகற்க வேண்டும். அதே போல ஆசிரியர்களும் சிறந்த அமைதியான முறையில் அவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.

இதனையடுத்து நாடாளுமன்ற அமர்வில் பேசிய கல்வி அமைச்சர் சான் சுன் சிங் river valley பள்ளியில்
இறந்த அந்த மாணவனுடன் படித்த மற்றும் அவனுக்கு வகுப்புகள் எடுத்த ஆசிரியர்கள் மிகுந்த வேதனையில் இருப்பதால் அவர்களுக்கு உள­வி­யல் ரீதியான உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்தார். சுமார் 540 மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்கு இந்த உதவி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts