TamilSaaga

“சிங்கப்பூரில் மோசடிகளால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள்”.. சென்ற ஆண்டு நிலவரம் என்ன? : அமைச்சர் விளக்கம் – ஊழியர்களே உஷார்!

கடந்த ஏப்ரல் 4ம் தேதி நமது சிங்கப்பூரில் நடந்த பாராளுமன்ற அமர்வில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன, இதில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் அமைச்சர் சண்முகம். சென்ற 2021ம் ஆண்டு பதிவான மோசடி சம்பவங்களால் சுமார் 17 சதவிகிதம் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

“மலேசியன் ஏர்லைன்ஸ்.. 31,000 அடி உயரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு” : கதறி அழுத பயணிகள் – உண்மையில் அந்த விமானிகள் Great!

கடந்த ஆண்டு சுமார் 23,500க்கும் அதிகமான மோசடி வழக்குகள் பதிவான நிலையில் அவற்றில் வெளிநாட்டு பணியாளர்கள் 17 சதவிகிதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். குறிப்பாக Long Term Pass வைத்திருப்பவர்களின் 0.2 விழுக்காட்டினரும், Work Pass வைத்திருப்பவர்களில் 1.5 விழுக்காட்டினரும் மற்றும் S Pass வைத்திருப்பவர்களின் 1.6 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நமது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம், தினமும் பல விதங்களில் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. SMS மோசடி, இணையதள மோசடி, அலைபேசி வழியாக போலி அழைப்புகள் என்றும் தினமும் பல்வேறு போலி அமைப்புகள் குறித்து அமைச்சகம் தொழிலாளர்களை எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

“ஸ்டேஜ் 4 கேன்சர்.. இன்னும் 1 வருஷம் தான் என் வாழ்கை” : சிங்கப்பூரில் மனைவியின் எதிர்காலத்திற்காக போராடும் Hawker – பொதுமக்கள் உதவலாம்!

மேலும் சிங்கப்பூர் போலீசாரும் வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமும் விடுதி அமைப்புகளுடன் இணைந்து மோசடிகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆகையால் தொழிலாளர்களும் அரசுடன் இணைந்து ஒத்துழைத்தால் இன்னும் பெரிய அளவில் மோசடிகளை தவிர்க்க முடியும் என்றும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts